விருதுநகரே வியந்துடுச்சே.. கிடாயுடன் நெருங்கி வந்ததுமே..துள்ளி துள்ளி குதிச்ச மாப்ளை.. நரிக்குடியில்
சென்னை: விருதுநகர் மாவட்டத்தில் நடந்த திருமண வைபவம்தான், சோஷியல் மீடியாவில் பலராலும் உற்று கவனிக்கப்பட்டு வருகிறது.. என்ன காரணம்?
திருமண பரிசுகள் என்றாலே யாராலும் வாழ்க்கையில் மறக்க முடியாதவை.. புதுமண தம்பதிகள் வரவிருக்கும் ஆண்டுகளில் அவர்கள் பொக்கிஷமாக இருக்கும் ஒரு தோற்றத்தை உருவாக்குதே இத்தகைய சிறந்த திருமண பரிசுகள்தான்.
குடும்பத்தில் சீர்வரிசை என்றால், கட்டில், மெத்தை, பீரோ, பாத்திரங்கள் போன்றவைகளை தம்பதிகளுக்கு சீர் வரிசைகளாக தருவார்கள்.

மணமக்கள்: ஆனால், மணமக்களுக்கு அவர்களது சொந்த பந்தங்களும், நண்பர்களும், திருமணத்திற்கு வந்திருக்கும் அத்தனை பேரும் ஏதாவது, ஒருவகையில், பரிசுப்பொருட்கள் மூலம் புதுவித தாக்கத்தை ஏற்படுத்திவிடுவதை மறுக்க முடியாது..
அந்தவகையில், சமீபகாலமாகவே, மணமக்களுக்கு தரும் பரிசுகளில் வித்தியாசம் கூடிவருகிறது.. குறிப்பாக, தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை காப்பாற்றும் வகையில், கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலும், புதுமண தம்பதிகளுக்கு திருமண பரிசு பொருட்களை தந்து அசத்தி வருகிறார்கள்.. அப்படி ஒரு சம்பவம்தான் விருதுநகர் மாவட்டத்தில் நடந்துள்ளது.
அசத்தல்: நரிக்குடி பகுதியை சேர்ந்தவர் சிவா... இவருக்கும், இருஞ்சிறை பகுதியை சங்கரலிங்கம் மகள் துர்கா என்பவருக்கும் நரிக்குடி அருகே உள்ள வீரக்குடி கரைமேல் முருகன் கோவிலில் திருமணம் நடந்தது...
வழக்கமாக மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு காளைகள், சண்டைக்கிடாய்கள், நாட்டு இன ரக நாய்கள் என பல்வேறு விலங்குகளை ஏராளமானோர் ஆர்வமுடனும், பாசத்துடனும் வளர்த்து வருகின்றனர்.
அந்தவகையில், மாப்பிள்ளை சிவாவுக்கும், சண்டை கிடாய்கள், சேவல்களை வளர்ப்பதில் நிறைய ஆர்வம் இருக்கிறதாம்..
கிடாய்கள்: அதனால், சிவாவின் நண்பர்கள், அவருக்கு பிடித்த, சண்டை கிடாய்கள், சேவல்கள், நாட்டு இன நாய்கள் போன்றவைகளை சீர் வரிசைகளாக கொண்டு வந்திருந்தனர்.. அவர்கள் கையில் சேவல்களையும், கிடாய்களையும் பார்த்ததுமே, மாப்பிள்ளை துள்ளி குதித்தார்.. திருமணத்திற்கு வந்திருந்த மணமக்களின் உறவினர்கள் மத்தியில் இந்த சம்பவம் மிகுந்த நெகிழ்ச்சியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது..

2 சண்டை ஆட்டு கிடாய்கள், 5 சண்டை சேவல்கள், நாட்டு ரக இனத்தை சார்ந்த கன்னி, சிப்பிப்பாறை நாய்கள் போன்றவற்றை நண்பர்கள் பரிசாக எடுத்து வந்திருந்தனர்.. பரிசினை மணமக்களுக்கு தரும்போது, சண்டை கிடாய்கள், சண்டை சேவல்கள், நாட்டு ரக நாய்கள் உள்ளிட்டவைகளுடன் போட்டோவையும் எடுத்து கொண்டனர்..
சேவல்கள்: இதைப்பற்றி மாப்பிள்ளையின் நண்பர்கள் சொல்லும்போது, "தமிழர்களின் வீர விளையாட்டு போட்டிகளான அழிந்து வரும் நிலையில் உள்ளது.. ஆட்டு கிடாய் சண்டை, சேவல் சண்டை உள்ளிட்ட பாரம்பரியமிக்க போட்டிகளுக்கு புத்துயிர் கொடுத்து ஊக்குவிக்கும் விதமாக , மாப்பிள்ளை சிவா விரும்பி வளர்த்து வரும் சண்டை ஆட்டு கிடாய்கள், சண்டை சேவல்கள், நாட்டு ரக இன நாய் ஆகியவற்றையே திருமண பரிசாக வழங்கினோம்" என்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications