வேலு என்ன சொல்லப்போறாரு.. நெடுஞ்சாலை துறையில் பெரிய எதிர்பார்ப்பு.. அறிவிப்புகள் வருமா? பரபரப சட்டசபை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணித் துறை கட்டடங்கள், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மானிய கோரிக்கைகள் மீது, விவாதம் நடக்க உள்ளது.

தமிழக சட்டசபை கூட்டம் நடந்துவருகிறது.. ஒவ்வொரு மானியக்கோரிக்கை அன்றும் மானியக்கோரிக்கைகளை தாக்கல் செய்து, புதிய அறிவிப்புகளை துறை சார்ந்த அமைச்சர்கள் வெளியிட உள்ளனர்.

 Good news by Minister Velu and debate on departmental grant request is going to start today in the assembly session

அந்தவகையில், நேற்றைய தினம், சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 26 புதிய அறிவிப்புகளைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

அப்போது பேசிய அமைச்சர், 2996 அரசு நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 540 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 175 கோடி மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்று கூறினார். தொடர்ந்து, வரும் கல்வி ஆண்டில் இரண்டாவது கட்டமாக 150 கோடி ரூபாய் மதிப்பில் 7 ஆயிரத்து 500 அரசு தொடக்கப் பள்ளிகளில் திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு மாதிரி பள்ளி என்ற அடிப்படையில், வரும் ஆண்டு 13 மாவட்டங்களில் மாதிரி பள்ளிகள் உருவாக்க 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை மேலும் ஊக்கப்படுத்தும் நோக்கில் 10 கோடி ரூபாய் மதிப்பில் மாபெரும் வாசிப்பு இயக்கம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் கூறினார். அத்துடன், 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆண்டு விழா நடத்தப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.தொடர்ந்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், அரசுப் பள்ளி மாணவர்கள் மாவட்ட, மாநில அளவிலும், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஏதுவாக 9 கோடி ரூபாய் மதிப்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு விளையாட்டு சிறப்புப் பள்ளிகள் உருவாக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தார்.

அந்தவகையில், இன்றைய தினமும் அமைச்சரவையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துறையாக கருதப்படுகிறது. இன்று ஏப்ரல் 1ம் தேதி நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மானியக் கோரிக்கையும் நடைபெற உள்ளது. அமைச்சர்கள் வேலு, மனோ தங்கராஜ் ஆகியோர் விவாதத்திற்கு பதில் அளித்து, தங்களது துறையில் செயல்படுத்தப்பட உள்ள புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

இன்றைய கூட்டம் முடிந்ததுமே நாளை விடுமுறை.. 3ம் தேதி பேரவை கூட்டம் இல்லை. 4ம் தேதி மகாவீர் ஜெயந்தி அரசு விடுமுறை. 5ம் தேதி வேளாண்மைத்துறை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம், 6ம் தேதி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, மாலையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும். அதற்கு பிறகு அடுத்தடுத்த நாட்களில் சட்டசபை மானியக் கோரிக்கைகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+