சென்னைக்கு பொற்காலம்.. 66 தாழ்தள பேருந்துகள் வந்தாச்சு.. கோயம்பேடு, தாம்பரம்.. இதுதான் புது பஸ் ரூட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் மேலும் 66 தாழ்தளப் பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த பேருந்துகள் எந்தெந்த வழித்தடங்களில் இயக்கப்படும் என்பது குறித்தும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

சென்னையை பொறுத்தவரை பேருந்துகளின் தேவை தவிர்க்க முடியாததாகிவிட்டது.. அதிலும், வார இறுதி நாள்களிலும், தொடர் விடுமுறை நாள்களிலும், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் முன்பை விட அதிகளவில் அரசு விரைவுப் பேருந்துகளை பயன்படுத்துவதால், பஸ்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டிய தேவை எழுந்தவாறே உள்ளது.

koyambedu

புதிய பேருந்துகள்: அதனால்தான், புதிய பேருந்துகள் பெருமளவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.. இதற்காகவே ஏராளமான பேருந்துகளும் வாங்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், சென்னையில் குறுகிய சாலைகளில் பயணிக்க முடியாதது உள்ளிட்ட காரணங்களால் 6 ஆண்டுகளுக்கு முன்பு, தாழ்தளப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. ஆனால், மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் மறுபடியும் தாழ்தளப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

தொழில்நுட்பம்: இதையடுத்து, மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய 611 தாழ்தளப் பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன... இதில் முதல்கட்டமாக 58 பேருந்துகளை கடந்த உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் தொடங்கி வைத்தார்..

இந்த பஸ்களில், இறங்கு தளத்தின் உயரத்தை 60 மி.மீ குறைத்து (kneeling) பயணிகள் ஏறிய பிறகு, பழைய உயரத்துக்கு மாற்றிக் கொள்ளும் வசதி, மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் ஏறி, இறங்குவதற்கு சாய்தள வசதி என பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன..

2ம்கட்டம்: பிராட்வே - கோவளம், கோயம்பேடு - கிளாம்பாக்கம், திருவொற்றியூர் - பூந்தமல்லி உள்ளிட்ட 17 வழித் தடங்களில் வலம் வருகின்றன. இந்நிலையில், 2ம் கட்டமாக 66 புதிய தாழ்தளப் பேருந்துகள் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன... இது சென்னைவாசிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.

இந்த 66 பேருந்துகள் அம்பத்தூர் தொழிற்பேட்டை - வேளச்சேரி, தாம்பரம் - செங்குன்றம், கோயம்பேடு - அண்ணா சதுக்கம் உள்ளிட்ட 11 வழித் தடங்களில் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்துக் கழகத்தின் எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 66 புதிய தாழ்த்தள பேருந்துகள், இயக்கப்படும் வழித் தடங்கள் குறித்த விவரங்களை சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.

இதுதான் ரூட்:

- தடம் எண் D70 அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருந்து வேளச்சேரிக்கு 5 பேருந்துகள்,
- தடம் எண் 104 தாம்பரத்திலிருந்து செங்குன்றம்க்கு 5 பேருந்துகள்,
- தடம் எண் 6D டோல்கேட் முதல் திருவான்மியூர் வழித்தடத்தில் 8 பேருந்துகள்,
- தடம் எண் 101 திருவெற்றியூர் முதல் பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் 2 பேருந்துகள்,
- தடம் எண் 104 C கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் வரை செல்லும் வழித்தடத்தில் 9 பேருந்துகள் இயக்கப்படும்
- 27B கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து அண்ணா சதுக்கம் செல்லும் வழித் தடத்தில் 5 பேருந்துகள்,
- தாம்பரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை செல்லும் வழித்தடத்தில் 5 பேருந்துகள்,
- தாம்பரத்தில் இருந்து மாமல்லபுரம் வரை செல்லக்கூடிய தடம் எண் 515 கொண்ட 5 பேருந்துகள்,
- தடம் எண் 70G வடபழனி முதல் கூடுவாஞ்சேரி செல்லும் வழித்தடத்தில் 6 பேருந்துகள்,
- தடம் எண் 18AET கிளம்பாக்கம் முதல் பிராட்வே செல்லும் வழித்தடத்தில் 10 பேருந்துகள்,
- தடம் எண் 21G பிராட்வே முதல் கிளம்பாக்கம் பேருந்து நிலையம் வரை செல்ல 6 பேருந்துகள் ஆகியவை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+