சென்னைக்கு தமிழக அரசு சூப்பர் திட்டம்.. ஷேர் ஆட்டோ வைத்திருப்பவர்களுக்கும் நல்ல செய்தி
ஷேர் ஆட்டோக்களை பொதுப் போக்குவரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றுவதற்கான திட்டத்தைத் தயாரிக்க, சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் முன்மொழிந்திக்கிறது.
சென்னை: பயணிகளின் எண்ணிக்கையில் சென்னை பெருநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு (எம்டிசி) அடுத்தபடியாக சென்னையில் இரண்டாவது பிரபலமான பொதுப் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிப்பது ஷேர் ஆட்டோக்கள் தான், அவற்றை ஒழுங்குபடுத்தவும் அங்கீகரிக்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
பொதுமக்கள் சென்னையில் பெரும்பாலும் சொந்த வாகனத்தில் செல்லவே விரும்புகிறார்கள். இதற்கு முக்கிய காரணம், சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு சரியான பேருந்து போக்குவரத்து வசதி இல்லை என்பதுதான். குறிப்பாக காலை மாலை வேளைகளில் மக்கள் வேலைக்கு செல்லவும், வேலை முடிந்து வீட்டிற்கு செல்லவும் பேருந்துக்காக காத்திருக்கும் நேரம் அதிகமாக உள்ளது. அதிகப்படியான மக்கள் கூட்டம் காரணமாக மக்கள் வேறு பேருந்தில் ஏறலாம் என்று காத்திருப்பதே இதற்கு காரணம்.
இந்நிலையில் பேருந்துகளில் செல்ல முடியாத மக்கள், பேருந்து வழித்தடங்கள் சரியாக இணைக்கப்படாத பகுதிகளில் மக்கள் பெரும்பாலும் ஷேர் ஆட்டோவையே விரும்புகின்றனர். சென்னையில் ஷேர் ஆட்டோக்கள் தான் பேருந்து வழித்தடங்கள் இல்லாத, அல்லது மக்கள் கூட்டம் நிரம்பி வரும் வழித்தடங்களில் போக்குவரத்து வசதிகளை அளிக்கின்றன.

மக்கள் போக்குவரத்து
இந்நிலையில் மக்கள் இப்படி போக்குவரத்துக்கு தனியார் வாகனங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க, அவற்றைப் பொதுப் போக்குவரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றுவதற்கான திட்டத்தைத் தயாரிக்க, சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் (CUMTA) முன்மொழிந்திக்கிறது.

கடைசிமைல்
சென்னை நகர கூட்டாண்மை திட்டத்தின் கீழ் உலக வங்கியின் உதவியுடன் இடைநிலை போக்குவரத்து திட்டம் தயாரிக்கப்படும் என்று போக்குரத்து ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ், ஷேர் ஆட்டோக்களின் இயக்கம், கடைசி மைல் இணைப்பு மற்றும் MTC பேருந்துகள் மூலம் சேவை செய்யப்படாத பகுதிகளுக்கு இணைப்பை வழங்கும் வகையில் ஒழுங்குபடுத்தப்படும் என்றார்.

மக்கள் விருப்பம் என்ன
தற்போதைய நிலையில், ஷேர் ஆட்டோக்கள், மாநகர பேருந்துகள் வருவதற்கு சில நிமிடம் முன்பு வந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றுவிடுவதால், MTC யின் வருமானம் குறைகிறது. பேருந்துகளில் அதிக கூட்டத்தை தவிர்க்கவும், விரைவாக இலக்கை அடையவும் பேருந்துகளுக்கு பதிலாக ஆட்டோக்களை ஷேர் செய்வதையே பயணிகள் விரும்புகின்றனர். இடைநிலை போக்குவரத்து திட்டத்தின் கீழ், பேருந்துகளை இயக்க முடியாத பகுதிகளுக்கு ஷேர் ஆட்டோக்களை மாற்ற சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் முன்மொழிகிறது . எனவே இதற்கான கட்டணத்தை நிர்ணயிக்க போகிறது.

சென்னை பேருந்துகள்
2013 ஆம் ஆண்டில் பொதுக் கொள்கை ஆராய்ச்சி மையம் (CPR) நடத்திய ஆய்வில், 18 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் ஒவ்வொரு நாளும் ஷேர் ஆட்டோக்களைப் பயன்படுத்துகின்றனர். இது சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்தின் பயணிகள் சேவைக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. மாநகரில் 3,500க்கும் குறைவான MTC பேருந்துகள் இருப்பதால், நகரம் முழுவதும் 12,000 ஷேர் ஆட்டோக்கள் தினசரி 2.50 லட்சத்திற்கும் அதிகமான பயணங்களை மேற்கொள்வதாக ஆய்வு மதிப்பிட்டுள்ளது. ஷேர் ஆட்டோக்கள் தினமும் மொத்தம் 16.20 லட்சம் கிலோமீட்டர் தூரத்தை கடக்கின்றன என்றும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில்
மேலும், ஷேர் ஆட்டோக்களைப் பயன்படுத்தும் பயணிகளில் 65 சதவீதம் பேர் ஒவ்வொரு நாளும் ஒருமுறை பயன்படுத்துகின்றனர். 87 சதவீதம் பேர் தங்கள் இறுதி இலக்கை அடைய அவற்றைப் பயன்படுத்துகின்றனர், மீதமுள்ள பயணிகள் மற்ற போக்குவரத்து முறைகளை அடைய ஷேர் ஆட்டோக்களைப் பயன்படுத்துகின்றனர். சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) ஏற்கனவே ஷேர் ஆட்டோக்களை இயக்கி வருகிறது, ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான பயணிகள் அவற்றைப் பயன்படுத்துகின்றனர்.

பயணிகள் பேட்டி
இந்நிலையில் ஷேர் ஆட்டோ பற்றி பயணி ஒருவர் கூறுகையில், இரவு நேரங்களில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை மாநகர பேருந்துகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. இதனால், ஏராளமான பயணிகள் எளிதில் கிடைக்கும் ஷேர் ஆட்டோக்களை பயன்படுத்துகின்றனர். பகல் நேரத்திலும் ஷேர் ஆட்டோக்கள் இருப்பதால் வேலைக்குச் செல்ல மாநகர பேருந்துகளுக்காக நாங்கள் காத்திருக்க வேண்டியதில்லை" என்றார்.

ஷேர் ஆட்டோக்கள் கட்டணம்
இதனிடையே சென்னையில் ஷேர் ஆட்டோக்கள் பயணத்தை ஒழுங்குபடுத்தவும் அங்கீகரிக்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.இத்திட்டத்தின் கீழ், ஷேர் ஆட்டோக்களின் இயக்கம், கடைசி மைல் இணைப்பு , பயண கட்டணம் மற்றும் MTC பேருந்துகள் மூலம் சேவை செய்யப்படாத பகுதிகளுக்கு இணைப்பை வழங்கும் வகையில் ஒழுங்குபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications