நல்ல காலம் பொறக்குது.. சென்னை கோடம்பாக்கம் டூ போரூர் சாலையில் பயணிப்போருக்கு இதுதான் குட்நியூஸ்
சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் பணி காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதி என்றால் கோடம்பாக்கம் முதல் போரூர் வரை உள்ள வழித்தடம் தான். இந்த சாலையில் பயணிப்போருக்கு நல்ல செய்தி வந்துள்ளது. இந்த பகுதியில் சாலை பழுதுபார்க்கும் பணிகள் விரைவில் முடிக்கப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னையில் திரும்பி பக்கம் எல்லாம் மெட்ரோ ரயில் பணிகளும், பாதாள சாக்கடை பணிகளும், மழை நீர் வடிகால் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதன் காரணமாக சென்னைவாசிகள் படாதபாடு படுகிறார்கள். சென்னையில் எதாவது ஒரு காரணத்திற்காக பெரும்பாலான சாலைகள் தோண்டப்பட்டுள்ளன. இதன் காரணமாக மக்கள் அவதிப்படுவது நிதர்சமான உண்மை. இந்நிலையில் வடகிழக்கு பருவ மழைக்கு முன்பாக சாலை பணிகள் மற்றும் மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.இதன்படி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அதே நேரம் புதிதாக சாலைகளை தோண்டக்கூடாது என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்

இந்நிலையில் சென்னையில் மெட்ரோ ரயில் பணிளால் பல சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சில சாலைகள் மோசமான நிலையில் இருக்கின்றன. அங்கெல்லாம் மழைக்கு முன்பாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் மெட்ரோ ரயில் பணி காரணமாக கோடம்பாக்கம் முதல் போரூர் வரை உள்ள வழித்தடத்தில் நடந்து வருகிறது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 4-வது வழித்தடமான இந்த திட்டத்தின்படி கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுகிறது. 26.1 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்தத் தடத்தில் 27 ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. இதில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் பாலம் வரை உள்ள வழித்தடத்தில் 9 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரையிலான உயர்மட்ட வழித்தடத்தில் 18 ரயில் நிலையங்களும் அமைக்கப்படுகிறது.
இந்த 4-வது வழித்தடத்தின் சென்னையின் முக்கிய பகுதியான மெரினா கடற்கரையில் இருந்து மயிலாப்பூர், நந்தனம், தி.நகர், கோடம்பாக்கம், வடபழனி, போரூர், அய்யப்பந்தாங்கல், காட்டுப்பாக்கம் ஆகிய பகுதிகளை இணைத்து பூந்தமல்லி சென்றடைகிறது. சென்னையின் மையப்பகுதியில் அமையும் வழித்தடம் என்பதால் கடும் போக்குவரத்து நெரிசலை சந்தித்து வருகிறார்கள். இது ஒருபுறம் எனில், மழை காரணமாக சாலையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோடம்பாக்கம் முதல் போரூர் வரை உள்ள வழித்தடத்தில் பயணிப்போருக்கு நல்ல செய்தி வந்துள்ளது.. இந்த பகுதியில் சாலை பழுதுபார்க்கும் பணிகள் விரைவில் முடிக்கப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோடம்பாக்கம் முதல் போரூர் வரையிலான ஆற்காடு சாலையில் 13.3 கி.மீ நீளத்திற்கு சாலையை பழுதுபார்க்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இரவு மற்றும் பகல் நேரங்களில் அவ்வப்போது பெய்துவரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக சாலை பழுதுபார்க்கும் பணி முடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
கோடம்பாக்கம் முதல் போரூர் வரையிலான ஆற்காடு சாலையில் வடபழனி, சாலிகிராமம், சாலிகிராமம் கிடங்கு, வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர், காரம்பாக்கம் மற்றும் ஆலபாக்கம் ஆகிய பகுதிகளில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் ஒப்பந்ததாரரான லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் மூலம் சாலை பழுதுபார்க்கும் பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது.
தார்சாலை பணிகள் மழை பெய்யும் காலத்தில் செய்ய இயலாத காரணத்தினாலும், வடகிழக்கு பருவமழை வழக்கம்போல் இல்லாமல் முன்னதாகவே எதிர்பாராமல் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. எனவே, இரவு நேரங்களில் மழை பெய்யாத ஒரு வார காலத்தில் சாலை பழுதுபார்க்கும் பணிகள் அனைத்தும் முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகள் இரவு நேரங்களில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது" இவ்வாறு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications