ஓயோ ஓட்டலில் ரூம் புக் பண்றீங்களா? ஆதார் ஜெராக்ஸ் அவசியமில்லை! UIDAI புது ரூல்ஸ்! ஜோடிகளுக்கு ஹேப்பி
சென்னை: ஓயோ உள்ளிட்ட ஹோட்டல்களில் தங்கும் பயணிகளுக்கு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. UIDAI கொண்டு வரும் புதிய விதிமுறையால், அடையாள சரிபார்ப்பு முழுமையாக டிஜிட்டல் முறையில் நடைபெற உள்ளது. இது ஓட்டலில் ரூம்களை புக் செய்து பயணிக்கும் ஜோடிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது. அது என்ன தெரியுமா?
ஓயோ (OYO) ரூம்கள் சிலரால் தவறான நோக்கத்தில் பயன்படுத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. குறிப்பாக, திருமணமாகாத இளம் ஜோடிகள் அறைகளை தவறாக பயன்படுத்துவது கலாச்சார சீர்கேடு என விமர்சனங்கள் அதிகரித்தன.

ஓயோ ஓட்டல் ரூம்
இதன் காரணமாக ஓயோ புதிய விதிகளை சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது. அதன்படி, திருமணமாகாத ஜோடிகள் இனி செக்-இன் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள், செக்-இன் போது உறவை நிரூபிக்கும் ஆவணங்கள் கட்டாயம். ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
இந்த விதி உத்தரபிரதேசம் மீரட்டில் முதலில் அமல்படுத்தப்பட்டது. ஆனால், இது தனிநபர் சுதந்திரத்திற்கு எதிரானது என மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.
ஆதார் ஜெராக்ஸ்
இந்நிலையில், மற்றொரு புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.. அதன்படி இனிமேல் ஓயோ (OYO) உள்ளிட்ட எந்த ஹோட்டலிலும் செக்-இன் செய்யும்போது ஆதார் அட்டையின் ஜெராக்ஸ் அல்லது புகைப்பட நகலை கொடுக்க வேண்டிய அவசியமில்லை...
காரணம், வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகளை பாதுகாக்கும் நோக்கில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு புதிய மற்றும் மிக முக்கியமான விதிமுறையை விரைவில் அமல்படுத்த போகிறதாம்..
இதுவரை பல ஹோட்டல்கள், விடுதிகள் மற்றும் தங்கும் இடங்களில் ஆதார் அட்டையின் நகலை வாங்கி, அதை கோப்புகளாகவோ அல்லது டிஜிட்டல் முறையிலோ சேமித்து வந்தன. இதனால் அந்த தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படுவதற்கும், தரவு கசிவுக்கும் வாய்ப்பு இருந்தது. எனவேதான் இதை முற்றிலும் தடுக்கவே UIDAI இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது..
ஆதார் சட்டத்தின்படி, எந்த தனியார் நிறுவனமும் ஆதார் நகலை சேகரித்து சேமிப்பது தவறு என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஓயோ ஹோட்டல்
இதுகுறித்து UIDAI தலைமை செயல் அதிகாரி புவனேஷ் குமார் சொல்லும்போது, "புதிய விதிமுறையின்படி, ஆதார் மூலம் அடையாள சரிபார்ப்பை செய்ய விரும்பும் ஹோட்டல்கள் மற்றும் நிறுவனங்கள் முதலில் UIDAI-யில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த நிறுவனங்களுக்கு மட்டுமே ஆதார் சரிபார்ப்பு வசதி வழங்கப்படும். பதிவு செய்யாத ஹோட்டல்கள், வாடிக்கையாளர்களின் ஆதார் விவரங்களை எந்த வடிவிலும் சேகரிக்க முடியாது.. இந்த விதி விரைவில் நடைமுறைக்கு வரும்" என்று தெரிவித்துள்ளார்.
எனவே இனி ஹோட்டல்களில் அடையாள சரிபார்ப்பு முழுமையாக டிஜிட்டல் முறையிலேயே நடக்கும். வாடிக்கையாளர்கள் ஆதார் அட்டையின் ஜெராக்ஸ் அல்லது காகித நகலை கொடுக்க வேண்டியதில்லை.
அவர்களின் ஆதார் அட்டையில் உள்ள QR கோடை ஸ்கேன் செய்தாலோ, அல்லது புதிய ஆதார் மொபைல் செயலியை பயன்படுத்தினாலோ அடையாளம் உறுதி செய்யப்படும். இதற்காக UIDAI, பதிவு செய்த ஹோட்டல்களுக்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளை வழங்கும்.
ஜோடிகளுக்கு ஹேப்பி
மேலும், சில ஹோட்டல்கள் தங்களின் சொந்த கம்ப்யூட்டர் சிஸ்டத்திலும் இந்த சரிபார்ப்பு முறையை API மூலம் இணைத்துக் கொள்ளலாம். இதனால் சரிபார்ப்பு வேகமாக நடைபெறும்; சர்வர் சிக்கல்கள் மற்றும் தாமதங்கள் பெரிதும் குறையும்.
அதுமட்டுமல்ல, இந்த புதிய முறையால் வாடிக்கையாளர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். ஆதார் ஜெராக்ஸ் தவறான கைகளில் சிக்கும் அபாயம் முற்றிலும் குறையும். செக்-இன் நடைமுறை வேகமாகவும் எளிதாகவும் முடியும். மேலும், தேவையான குறைந்தபட்ச தகவல்களை மட்டும் வழங்கும் பாதுகாப்பான சூழல் உருவாகும்.
ஹேப்பி - குட் நியூஸ்
டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்திற்கு இணங்க இந்த மாற்றம் கொண்டு வரப்படுவதாக UIDAI தெரிவித்துள்ளதுடன், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மொத்தத்தில் இந்த அதிரடி ரூல்ஸ் மாற்றமானது, ஹோட்டலில் தங்கும் மக்களுக்கு இது உண்மையிலேயே ஒரு நல்ல மாற்றமாக பார்க்கப்படுகிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications