அடி தூள்! காலையில் கோரிக்கை.. மாலையே நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின்.. பத்திரிகையாளர் பென்ஷன் உயர்வு!
சென்னை: பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியத்தை ரூ.15,000 ஆக உயர்த்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பத்திரிகையாளர்கள் குடும்ப ஓய்வூதியம் ரூ.6,000-ல் இருந்து ரூ.7,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று இன்றே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (மார்ச் 13) சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, பத்திரிகையாளர்கள் ஓய்வூதியம், நலவாரியம், குடியிருப்பு, காப்பீடு, மருத்துவ உதவி உட்பட பத்திரிகையாளர்களின் நலன் சார்ந்து அரசு சார்பில் நிறைவேற்றித் தர வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர்.

மனுவை முழுமையாக படித்துப் பார்த்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்திருந்தார். இந்நிலையில், பத்திரிகையாளர்களின் மருத்துவக் காப்பீடு, வீட்டுமனை மற்றும் ஓய்வூதியத்தை உயர்த்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பத்திரிகையாளர் சங்கத்தின் பிரநிதிகள் முதலமைச்சரை சந்தித்தனர். அப்போது அவர்கள் பெற்றுவரும் ஓய்வூதியத்தில் உயர்வு, மருத்துவக் காப்பீடு மற்றும் வீட்டுவசதி உள்ளிட்ட கோரிக்கைகளை முதலமைச்சர் அவர்களிடம் முன்வைத்தனர்.
பத்திரிகையாளர்கள் சங்கத்தினரின் கோரிக்கையினை ஏற்கும் வகையில் பத்திரிகையாளர்கள் தற்போது பெற்றுவரும் ஓய்வூதியம் மாதம் 12 ஆயிரம் ரூபாயில் இருந்து, 15 ஆயிரம் ரூபாயாகவும், குடும்ப ஓய்வூதியம் 6 ஆயிரம் ரூபாயில் இருந்து 7 ஆயிரத்து 500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளார். அதேபோல, அங்கீகார அடையாள அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் மருத்துவ காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை பத்திரிகையாளர்கள் குடியிருக்க வீடு அல்லது வீடுகட்ட நிலம் ஒதுக்கித் தரவேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் செங்கல்பட்டு மாவட்டத்தில் வீட்டுமனைகள் வழங்க ஏற்பாடு செய்யவும், இதற்கு பத்திரிகையாளர்கள் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் தொடங்கி நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பத்திரிகையாளர்கள் சங்கத்தினரின் ஏனைய கோரிக்கைகள் குறித்து விரைவில் பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் கோரிக்கையை ஏற்று, பணியின் போது உயிரிழக்கும் பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.5 லட்சம் நிதி உதவியை ரூ.10 லட்சமாக உயர்த்தியதற்கும்; நல வாரியம் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருவதற்கும்; ஓய்வூதியத் தொகை உயர்த்தப்பட்டதற்கும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில்கொண்டு மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே, செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், இன்று காலையில் பத்திரிகையாளர்கள் சங்கத்தினர் வைத்த கோரிக்கையை, மாலைக்குள் நிறைவேற்றி உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
-
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
தோல்விக்கு காரணம் என்ன? ரிப்போர்ட்டை கண்டதும் உதயநிதி தந்த ரியாக்சன்.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ்












Click it and Unblock the Notifications