தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட்நியூஸ்.. இன்று நடக்கும் முகாம்களை மிஸ் பண்ணிடாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொது வினியோக திட்டத்தின் பயன்களை மக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நவம்பர் மாதத்துக்கான மாதாந்திர பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று தமிழ்நாடு முழுக்க நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.

ரேஷன் கார்டில் முகவரி மாற்றுவது, ரேஷன் கார்டில் குழந்தைகளின் பெயர் சேர்ப்பது, ரேஷன் கார்டில் செல்போன் எண்களை பதிவு செய்வது, ரேஷன் கார்டில் திருமணமான மகன் அல்லது மகள்களின் பெயரை நீக்குவது, புதிதாக திருமணம் ஆனவர்கள் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது போன்ற பணிகளை செய்ய வேண்டும் என்றால் எளிதான காரியமாக இருப்பது இல்லை.

Good news for ration card holders all over Tamil Nadu Don t miss the camps happening today

நேரில் சென்று விண்ணப்பித்தாலும், ஆன்லைனில் விண்ணப்பித்தாலும் சில நாட்கள் அலைய வேண்டிய நிலையும் இருக்கும். இந்த சூழலில் அதிகாரிகள் அனைவரும் மக்களை தேடி செல்லும் வகையில் முகாம்கள் ஒவ்வொரு மாதமும் நடப்பது வழக்கம். அந்த முகாம்களில் சென்றுவிண்ணப்பிங்களை தந்தால் உடனடி தீர்வு கிடைக்கிறது அந்த வகையில் பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் வரும் இன்று ( நவம்பர் 9ம் தேதி ) தமிழ்நாடு முழுவதும் நடக்க உள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:பொது வினியோக திட்டத்தின் பயன்களை மக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுவது வழக்கமாகும்.

அதன்படி, இந்த (நவம்பர்) மாதத்துக்கான மாதாந்திர பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. சென்னையில் உள்ள உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் 19 மண்டல உதவி கமிஷனர் அலுவலகங்களில் வருகிற 9-ந் தேதியன்று (நாளை மறுதினம்) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.

ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது வினியோக திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், ரேஷன் கடைகளில் பொருள் பெற நேரில் வரமுடியாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகார சான்று வழங்கப்படும்.

பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையில் உள்ள 19 மண்டல அலுவலக பகுதிகளில் உள்ள ரேஷன் கார்டுதாரர்கள் இந்த சேவையினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்." என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

இதனிடையே மதுரை மாவட்ட மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக அதிகாரி வெளியிட்ட அறிவிப்பில், மதுரை மாவட்டத்தில் பொது வினியோக (ரேஷன் கடை) திட்ட சேவைகள் குறித்த மக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இந்த முகாம் குடிமைப்பொருள் தாசில்தார் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் புதிய குடும்ப அட்டை விண்ணப்பிக்க, குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், நகலட்டை கோருதல், கைப்பேசி எண் பதிவு, மாற்றம், அங்கீகார சான்று, தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்கள் மற்றும் இதர குறைகள் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் நேரடியாக முகாம் அலுவலரிடம் வழங்கி தீர்வுகள் பெறலாம். இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

சென்னை மதுரை மட்டுமல்ல, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், ஈரோடு என தமிழ்நாடு முழுவதும் உள் 38 மாவட்டங்களிலும் உள்ள குடிமைப்பொருள் தாசில்தார் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இன்று பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற போகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+