ரேஷன் கார்டுதாரர்களுக்கு நிம்மதி.. இனி உயராது.. அரிசி விலையில் மீண்டும் மாற்றம்.. தமிழக மக்கள் குஷி
சென்னை: சமீப நாட்களாகவே அரிசி விலை குறைந்து காணப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. என்ன காரணம்?
தமிழகத்தில் அத்தியாவசிய உணவு பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரப்பட்டதுமே, அரிசி விலையில் மாற்றம் தென்பட்டது.. கிலோவுக்கு 5 ரூபாயில் இருந்து 15 ரூபாய் வரை விலை அதிரடியாக உயர்ந்த நிலையில், அது மெல்ல மெல்ல உயர்ந்து சென்னையில் 25 கிலோ அரிசி மூட்டையின் விலை ரூ.100 விற்பனை செய்யப்பட்டது.

மிக்ஜாம் புயல்: பிறகு, பருவமழை தவறியது, குறைவான விளைச்சல், மிக்ஜாம் புயல், ஜனவரியில் வீசிய பலமான காற்று, போன்ற காரணங்களால் விளைச்சல் குறைந்தது.. இது நெல் விலை உயர்வுக்கு காரணமாகிவிட்டது. இதற்கு நடுவில் மேட்டூர் அணையும் மூடப்பட்டு, சம்பா சாகுபடிக்கு மழையும் கைகொடுக்காமல் போனதால், டெல்டா விவசாயிகளும் விழிபிதுங்கினார்கள்.
இறுதியில், சென்னையில் மொத்த விலையில் கிலோ ரூ.60-க்கு விற்ற புழுங்கல் அரிசி, கிலோ ரூ.68 ஆக உயர்ந்தது. ரூ.60-க்கு விற்ற வேகவைத்த அரிசி ரூ.70 ஆக உயர்ந்தது.. பாஸ்மதி அரிசி கிலோ ரூ.120-க்கும், பழுப்பு அரிசி ரூ.39-க்கும் விற்பனையானது. ரூ.37-க்கு விற்ற இட்லி அரிசி ரூ.40, பிராண்டட் அரிசி கிலோவுக்கு ரூ.10 வரையும் உயர்ந்தது. சென்னையில் சில்லறை விற்பனையில் அரிசியின் கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.17 வரை எகிறியது.
நெல் வரத்து: இப்படிப்பட்ட சூழலில்தான், அரிசி போன்ற பொருள்களுக்கான ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருந்த நிலையில், ஆந்திரா, தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து நெல் வரத்து அதிகரித்தது. கோடை விளைச்சலும், சந்தைக்கு வந்து கொண்டிருப்பதால், அரிசியின் விலையில் மாற்றம் தென்பட துவங்கியது.
அதன்படி, கடந்த வாரம் 1 கிலோ புழுங்கல் அரிசி கிலோவுக்கு ரூபாய் 8 வரை குறைந்து விற்பனை செய்யப்பட்டது.. அரிசியின் விலை திடீரென குறைந்ததால், பொதுமக்களுக்கு நிம்மதியை தந்தது.
மகிழ்ச்சி தகவல்: இந்நிலையில், இன்னொரு மகிழ்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.. அதாவது, சென்னையில் மொத்த விலையில் கிலோ ரூ.60-க்கு விற்ற புழுங்கல் அரிசி, கிலோ ரூ.68 ஆக உயர்ந்துள்ளது. ரூ.60-க்கு விற்ற வேகவைத்த அரிசியானது, ரூ.70 ஆக உயர்ந்துள்ளது. பாஸ்மதி அரிசி கிலோ ரூ.120-க்கும், பழுப்பு அரிசி ரூ.39-க்கும் விற்பனையாகிறது.
இப்போது, கோடை விளைச்சலும், சந்தைக்கு வரத்தொடங்கிவிட்டதால், அரிசியின் விலை படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. அதாவது ஒரு கிலோ புழுங்கல் அரிசி கிலோவுக்கு ரூபாய் 8 வரை குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது... இந்த விலை குறைப்பானது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
6 மாதங்கள்: அதுமட்டுமல்ல, இந்த விலை மாறுதல்கள் ரேஷன் கடையில் அரிசி தட்டுப்பாடுக்கு வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களை எடுத்துக் கொண்டால், எவ்வளவுதான் அரிசி விலை உயர்ந்தாலும், தமிழக ரேஷன் கடைகளில் அரிசி தட்டுப்பாடு எதுவும் வரவில்லை..
வழக்கம் போல ரேஷன் கடைகள் மூலமாக பொது மக்களுக்கு அரிசி விநியோகம் வழங்கப்படும் என்றும், போதிய அளவில் அரிசி இருப்பு உள்ளதாகவும், அமைச்சர் பெரிய கருப்பன் உறுதி தந்தவாறே இருந்தார். அதற்கேற்றவாறு, தற்போதுவரை ரேஷனில் அரிசிக்கு தட்டுப்பாடும் இல்லாமல் சீராக வழங்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications