வீடுகளுக்கு கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்தவர்களுக்கு குட்நியூஸ்.. காத்திருப்பு காலம் குறைந்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை: எண்ணெய் சந்தைப்படுத்தும் 3 நிறுவனங்களும் தமிழ்நாடு முழுவதும் வீடுகளுக்கான சமையல் கியாஸ் வினியோகத்தையும் தடையின்றி மேற்கொண்டு வருகின்றன. எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் தொடர் முயற்சிகளும், தமிழ்நாடு அரசின் நெருங்கிய கண்காணிப்பின் காரணமாகவும், பெரும்பாலான பகுதிகளில் வீடுகளுக்கான சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகத்திற்கான காத்திருப்பு காலம் 5 நாட்களுக்குக் குறைவாகக் குறைக்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.அசோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில்,"தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் இந்திய எண்ணெய் நிறுவனம், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள் எரிபொருட்களை சந்தைப்படுத்தி வருகின்றன. இந்த நிறுவனங்கள் கீழ் செயல்படும் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கிடைக்கின்றன.

Waiting period reduced Good news for those who have booked gas cylinders for their homes

சுத்திகரிப்பு நிலையங்கள், முனையங்கள் மற்றும் பணிமனைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான வினியோகச் சங்கிலி தடை இல்லாமல் சீராக செயல்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் இருப்பு நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, இடையறாத வினியோகம் உறுதி செய்யப்படுகிறது.

எண்ணெய் சந்தைப்படுத்தும் 3 நிறுவனங்களும் தமிழ்நாடு முழுவதும் வீடுகளுக்கான சமையல் கியாஸ் வினியோகத்தையும் தடையின்றி மேற்கொண்டு வருகின்றன. எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் தொடர் முயற்சிகளும், தமிழ்நாடு அரசின் நெருங்கிய கண்காணிப்பின் காரணமாகவும், பெரும்பாலான பகுதிகளில் வீடுகளுக்கான சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகத்திற்கான காத்திருப்பு காலம் 5 நாட்களுக்குக் குறைவாகக் குறைக்கப்பட்டுள்ளது" இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

சிலிண்டர் புக்கிங் காலம்

அதேநேரம் சிலிண்டர் முன்பதிவு காலம் 45 நாட்களாகவே நீடிக்கிறது. ஒரு சிலிண்டர் உங்களுக்கு டெலிவரி ஆன தேதியில் இருந்து அடுத்த 45 நாட்களுக்கு புதிய சிலிண்டர் நீங்கள் முன்பதிவு செய்ய முடியாது. 46வது நாள் தான் முன்பதிவு செய்ய முடியும். அடுத்த ஐந்து நாளில் அதாவது 50வது நாளில் உங்களுக்கு சிலிண்டர் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. முன்னதாக சிலிண்டர் முன்பதிவு செய்த பின்னரும் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் எண்ணெய் நிறுவனங்களின் தீவிரமான கண்காணிப்பு மற்றும் முயற்சி காரணமாக காத்திருப்பு காலம் ஐந்து நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி சிலிண்டர் முன்பதிவு செய்த ஐந்து நாளில் உங்களுக்கு வீடு தேடி சிலிண்டர் வந்துவிடும்.

வீட்டு சிலிண்டர் விலை வரும் மே1ம் தேதி உயர்த்தப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. ஒருவேளை பலர் இன்று முன்பதிவு செய்கிறார்கள். 1ம் தேதி டெலிவரி ஆகிறது என்றால், அன்றையதேதியில் என்ன விலை விற்கிறதோ அந்த விலையில் தான் உங்களுக்கு சிலிண்டர் வழங்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+