பத்திரப்பதிவு.. பதிவுத்துறையில் செம மேஜிக்.. 4 வருடத்தில் கோடி கோடியா குவித்து தமிழக அரசு குட்நியூஸ்
சென்னை: சொத்துக்களை வாங்கும் பெரும்பாலான மக்கள், அந்த சொத்துக்களை முறைப்படி பத்திரப்பதிவு செய்யும்போது, நல்ல நேரம், சுபமுகூர்த்த நாட்களை பார்ப்பது வழக்கமாக உள்ள நிலையில் முக்கிய தகவல் ஒன்றை தமிழக அமைச்சர் சொல்லியிருக்கிறார்.
நடப்பு மாதத்தில் பத்திரப்பதிவில் வருமானம் அதிகரித்தபடியே உள்ளது.. போன வருடம் 2023-24ம் நிதியாண்டில் 33.3 லட்சம் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், 2024-25-ம் நிதியாண்டில் 3 மாதத்தில் 32 லட்சம் பத்திரப்பதிவுகள் நடந்திருந்தன.. அதாவது 4 மாத வருவாய் மட்டுமே ரூ.20000 கோடியை தாண்டியிருந்தது..

பத்திரப்பதிவு - சாதனை
எனவே, இனிவரும் மாதங்களில் பத்திரப்பதிவு எண்ணிக்கையும், வருமானமும் அதிகரிக்கும் சூழலில், மேலும் வருமானம் அதிகமாகும் என தெரிகிறது... முக்கியமாக, நடப்பு நிதியாண்டில் கடந்த டிசம்பர் மாதம் வரையிலான கணக்குப்படி ரூ.14,525 கோடியை எட்டிவிட்டது. எப்படியும் இந்த ஆண்டும், கடந்த வருவாயை முறியடித்து சாதனை பதிவுத்துறை படைக்கும் என்ற எதிர்ப்பும் உள்ளது.
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, சுமார் 582 சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருவதுடன், வருவாய் ஈட்டித்தரும் துறையாகவும் விளங்கி கொண்டிருக்கிறது. அதனால்தான், பத்திரப்பதிவு அலுவலகங்களில் முகூர்த்த நாட்கள், வார விடுமுறைகளில் பத்திரங்களை பதிவு செய்வோர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முயற்சியை கையில் எடுத்தது.
சுபமுகூர்த்த தினம்
ஏனென்றால், சொத்துக்களை வாங்கும் பெரும்பாலான மக்கள், அந்த சொத்துக்களை முறைப்படி பத்திரப்பதிவு செய்யும்போது, நல்ல நேரம், சுபமுகூர்த்த நாட்களை பார்ப்பது வழக்கமாக உள்ளது.. சுபமுகூர்த்த தினத்துக்காக பத்திரப்பதிவு செய்யாமல், பலரும் காத்திருப்பார்கள்.. இதனை மையப்படுத்திய முகூர்த்த நாட்களில் கூடுதல் டோக்கன்களை விநியோக்க முடிவானது. எதிர்பார்த்தபடியே பத்திரப்பதிவு செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.. இதனால் அரசுக்கும் வருவாய் வெகுவாக கிடைத்து வருகிறது.
இந்நிலையில், நேற்றைய தினம் சட்டசபையில் வணிக வரி மற்றும் பதிவுத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு, அமைச்சர் மூர்த்தி அளித்த பதிலுரையில் சில முக்கிய தகவல்களை வெளியிட்டார்..
வணிக வரித்துறை
அதில், "மாநில அரசின் வரி வருவாயில் வணிக வரித்துறை வாயிலாக, 71.6 சதவீதமும், பதிவுத்துறை வாயிலாக, 15.4 சதவீதம் பெறப்படுகிறது. அரசின் மொத்த வருவாயில், 87 சதவீதம் ஈட்டித்தரும் துறைகளாக வணிக வரி மற்றும் பதிவுத்துறைகள் உள்ளன. முந்தைய, 10 ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில், வணிக வரித்துறை மொத்தமாக ஈட்டிய வரி வருவாய், 6.87 லட்சம் கோடி ரூபாய். ஆனால், திமுக ஆட்சி பொறுப்பேற்ற, கடந்த 4 ஆண்டுகளில் மட்டும், இதுவரை, 5.08 லட்சம் கோடி ரூபாய் வருவாயை, வணிக வரித்துறை ஈட்டியுள்ளது.
பதிவுத்துறையில், 10 ஆண்டு கால அதிமுக ஆட்சிக்காலத்தில் ஈட்டப்பட்ட மொத்த வருவாய், 88000,844 கோடி ரூபாய். ஆனால், திமுக ஆட்சியில், இதுவரை 72 ஆயிரத்து, 4 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
வரலாற்று சாதனை
கடந்த 4 வருடங்களில் வணிக வரித்துறையும், பதிவுத்துறையும் சேர்ந்து மொத்தமாக, 5.80 லட்சம் கோடி ரூபாய் வருவாயை ஈட்டி, வரலாற்று சாதனை படைத்துள்ளன. இந்த 2 துறைகளால் வசூலிக்கப்படும் இந்த வருவாயின் பங்களிப்பானது, அரசு புதுமையான பல திட்டங்களை செயல்படுத்தி, மாநிலத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்தவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் ஆதாரமாக உள்ளது.
மாநிலம் முழுதும், 128 சார் - பதிவாளர் அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதுவரை, 43 சார் - பதிவாளர் அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு, தற்போது பொதுமக்களின் பயன்பாட்டில் வந்துள்ளது. பதிவு மாவட்டங்களை பிரித்து, புதிய அலுவலகங்களை உருவாக்கவும், உள்கட்டமைப்புகளை வழங்கவும், இந்த நிதியாண்டில், பதிவுத்துறைக்கு, 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications