அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் 15-வது ஊதிய உயர்வு எப்படி இருக்கும்.. இன்று குட்நியூஸ்?
சென்னை: அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் 15-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தை கடந்த ஆகஸ்டு 27-ம் தேதி நடந்தது.இந்நிலையில் , 15-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பான 2-ம் கட்ட பேச்சுவார்த்தையை 2 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. இதன்படி இந்த பேச்சுவார்த்தை 13-ந்தேதி (இன்று) மற்றும் 14-ந்தேதி (நாளை) காலை 11 மணியளவில் குரோம்பேட்டை மாநகர் போக்குவரத்துக் கழக பயிற்சி மையத்தில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற உள்ளது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் சுமார் 1.20 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை போடப்படுவது வழக்கமாக உள்ளது. 13-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம், கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் காலாவதியானது. இதையடுத்து தொழிற்சங்கங்களுடன் நடைபெற்ற பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 24-ம் தேதி 14-வது ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.

அதன்படி, அடிப்படை ஊதியத்தை பே மேட்ரிக்ஸில் பொருத்தி 5 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. அப்போது ஊதிய உயர்வு ஒப்பந்தத்துக்கான காலம் 4 ஆண்டுகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அந்த ஊதிய ஒப்பந்தமும் கடந்த ஆண்டு ஆக.31-ம் தேதியுடன் காலாவதியாகிவிட்டது. இதனால் 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைந்து தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தின. அதேநேரம் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தொழிற்சங்கங்கள் மேற்கொண்டன.
இதையடுத்து தொழிலாளர் துறையின் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படியே தமிழக அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தையானது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி அன்று மாநகர போக்குவரத்துக் கழகத்தின் குரோம்பேட்டை பயிற்சி மைய வளாகத்தில் நடந்தது இதில், 85 சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அப்போது கூடுதலான எண்ணிக்கையில் தொழிற்சங்கங்கள் பங்கேற்றன. இதனால் 15-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பான 2-ம் கட்ட பேச்சுவார்த்தையை 2 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, கடந்த டிசம்பர் 27, 28-ந்தேதிகளில் சென்னை, குரோம்பேட்டை, மாநகர போக்குவரத்துக் கழகப் பயிற்சி மைய வளாகத்தில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் டிசம்பர் 26-ந்தேதி காலமானார். இதையடுத்து 2-ம் கட்ட பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, தமிழக அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை 13-ந்தேதி (இன்று) மற்றும் 14-ந்தேதி (நாளை) காலை 11 மணியளவில் குரோம்பேட்டை மாநகர் போக்குவரத்துக் கழக பயிற்சி மையத்தில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்படுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications