பரந்தூர் திட்டத்தில் நல்ல செய்தி வருமா? சீட்டில் உட்கார்ந்ததுமே விஜய் பல்டி? கேட்பது யார் பாருங்க
சென்னை: தமிழகத்தின் புதிய அரசாகப் பொறுப்பேற்றுள்ள விஜய் அரசு, பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் தனது நிலைப்பாடு என்ன என்பதைத் தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பரந்தூர் மக்களுக்காகப் போராடியவர், இப்போது ஆளுங்கட்சியாக இருக்கும் நிலையில் அந்தத் திட்டத்தை என்ன செய்யப்போகிறார்? தனிப்பட்ட முறையில் விஜய் எது வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், அந்தச் சேரில் நீங்கள் உட்காரும் போது அது முள் கிரீடம்.. அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னால் ஒரு பேச்சு, வந்த பிறகு பல்டி அடிக்கிறார்கள் என்றால் அதுதான் உண்மை, அதுதான் ரியாலிட்டி என்கிறார் பத்திரிகையாளர் மணி
மூத்த பத்திரிகையாளர் மற்றும் அரசியல் ஆய்வாளர் மணி ஒரு சேனலுக்கு தந்துள்ள பேட்டியில், "பரந்தூர் விமான நிலைய திட்டத்தின் அரசின் நிலைப்பாடு என்ன? போராட்டக்களத்துக்கு நேரடியாகவே அன்று ஆதரவை தெரிவித்தார் விஜய்..

பரந்தூர் விமான நிலைய திட்டம்
பரந்தூர் விமான நிலைய திட்டம் தொடர்பாக, தமிழக அரசு ஆய்வு கூட்டத்தை அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் மேற்கொண்டதாக செய்திகளும் வெளியாகியிருந்தன. அதில் அரசு என்ன முடிவு எடுத்தது. அந்த திட்டத்தை தொடர போகிறார்களா? கைவிட போகிறார்களா?
மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று அன்று குரல் கொடுத்தார்.. எதிர்க்கட்சியாக இருக்கும்போது வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிவிடலாம்.. ஆனால், ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு பெரிய திட்டத்தை நீங்கள் கைவிடுகிறீர்கள் என்றால், மத்திய அரசின் உதவி பல விவகாரங்களில் உங்களுக்குக் கிடைக்காது.. பரந்தூர் திட்டத்தை எல்லாம் நீங்கள் ஸ்கிராப் பண்ணுகிறீர்கள் என்றால், மத்திய அரசு அதை மிக கடுமையாகவே பார்க்கும்.
முள் கிரீடம் சேர்
தனிப்பட்ட முறையில் விஜய்க்கோ, தவெகவுக்கோ எது வேண்டுமானாலும் பேசிவிட்டுப் போகலாம்.. ஆனால், அந்தச் சேரில் நீங்கள் உட்காரும் போது அது முள் கிரீடம்.. அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னால் ஒரு பேச்சு, வந்த பிறகு பல்டி அடிக்கிறார்கள் என்றால் அதுதான் உண்மை, அதுதான் ரியாலிட்டி.
எட்டு வழிச் சாலையை திமுக எதிர்த்தது.. அவர்கள் ஆட்சிக்கு வந்த ரெண்டு வருடத்தில், அதை பசுமை வழிச்சாலை என்று பெயர் மாற்றிச் செயல்படுத்தினார்கள்.. அதேபோல், பரந்தூரில் தவெக அரசு ஏதாவது மேஜர் முடிவு எடுத்தால், அது மத்திய அரசுடன் நாங்க காம்ப்ரமைஸ் செய்கிறோம் என்பதற்கான தெளிவான சிக்னல்..
தமிழக அரசு விஜய் நிலைப்பாடு என்ன
மத்திய அரசைப் பகைத்துக்கொண்டு, அவர்களுக்குப் பிடிக்காததைச் செய்துகொண்டு ஆட்சி செய்வதும் ரொம்ப கஷ்டம்.. நிதி ஆதாரம் இல்லாமல் எந்த அரசும் இயங்க முடியாது.. வருவாய் தரக்கூடிய ரெவென்யூ சோர்சஸ் ரொம்பவே குறைவு.. இப்போதும் நிதி உதவிக்காக நாம் மத்திய அரசைத்தான் பெரிதும் நம்பி இருக்கிறோம்.. எனவே, மத்திய அரசாங்கத்தின் கொள்கைகளுடன் சமரசம் செய்யாமல் மாநிலத்தை ரன் பண்ண முடியாது
திமுக ஆட்சியில் இருக்கும்போது, எட்டு வழிச்சாலை விவகாரத்தில் அவர்கள் செய்தது அண்டர் கிரவுண்ட் டீலிங் என்று விஜய் விமர்சித்தார்.. இப்போது அதே விமர்சனம் அவர் மீதும் வர வாய்ப்புள்ளது.. மாநில நலன் சார்ந்து நான் செய்கிறேன் என்று விஜய் சொல்லலாம்.. ஆனால், பரந்தூர் மக்களுக்காக வழக்கு நடத்துபவர் விஜய்தான்.. இப்போது அந்தத் திட்டத்தின் எதிர்காலம் என்ன என்பதைத் தமிழக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது விஜய்யின் பொறுப்பு" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications