மழை வெள்ளத்தில் மிதக்கும் ராசிபுரம் அரசு மருத்துவமனை.. 3 அமைச்சர்கள் இருந்தும் பயனில்லை!
நாமக்கல்: தமிழகத்தில் மேற்கு பகுதியில் அவ்வப்போது மழை பெய்து கொண்டிருக்கிறது. நாமக்கல் ராசிபுரத்தில் கனமழை பெய்தது. ராசிபுரம் அரசு மருத்துவமனையில் மழை நீர் வெள்ளமாக தேங்கி, இதனால் யாரும் நடமாட முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் உள்பட மொத்தம் 3 அமைச்சர்கள் உள்ளனர். ஆனாலும் மக்களின் அத்தியாவசிய தேவையிலேயே அலட்சியமாக செயல்படுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சட்டமன்ற தேர்தலில் வெற்றி தவெக ஆட்சியமைத்துள்ளது. முதலமைச்சர் விஜய்யுடன் 35 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. தவெகவின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

வெள்ளத்தில் மிதக்கும் ராசிபுரம் அரசு மருத்துவமனை
அமைச்சரவையில் அவருக்கு சுகாதாரத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மருத்துவம், மக்கள் நல்வாழ்வு, சுகாதாரத்துறைகள் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. சுகாதாரத்துறையை சீரமைப்போம். அமைச்சர்கள், அதிகாரிகள் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெறுவார்கள் என்று அவர் கூறியிருந்தார். அதே மண்டலத்தில் உள்ள சீனியர் அமைச்சர் செங்கோட்டையன் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்றார்.
அருண்ராஜின் சொந்த மாவட்டத்தில் நிலைமை இன்னும் மோசம். கொங்கு மண்டலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது. ராசிபுரம் பகுதியிலும் பலத்த மழை பெய்தது. கனமழை காரணமாக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
3 அமைச்சர்கள் இருந்தும் பயனில்லை
மருத்துவமனை வளாகம், சிகிச்சை பிரிவு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் நோயாளிகள், அவர்களுடன் வந்தவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் நடப்பதற்கு கூட சிரமப்படுகிறார்கள். நோயாளிகள் வீல்சேர் மூலம் தான் மற்ற சிகிச்சை பிரிவுக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். இதனால் அங்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அங்கு மழைநீரை வெளியேற்றி நோயாளிகளை பாதுகாக்க வேண்டும், மேற்கொண்டு மழை நீர் தேங்காதவகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையை கையில் வைத்துள்ள அருண்ராஜின் சொந்த மாவட்டத்திலேயே இந்த அவல நிலை உள்ளது. நாமக்கல் மாவட்டத்திற்கு மொத்தம் 3 அமைச்சர்கள் உள்ளனர்.
மக்கள் வேதனை
ராசிபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற லோகேஷ் தமிழ்செல்வன் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சராக உள்ளார். குமாரபாளையம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற விஜயலட்சுமி பால்வளத்துறை அமைச்சராக உள்ளார். இத்தனை அமைச்சர்கள் இருந்தும் பயனில்லை என்று நாமக்கல் மக்களும், சமுக ஆர்வலர்களும் வேதனை தெரிவிக்கிறார்கள்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications