கொடைக்கானலில் 4 சுற்றுலா தலங்களுக்கு கட்டணம் கிடையாது! சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை குட் நியூஸ்!
திண்டுக்கல்: கோடை விடுமுறை காரணமாக கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் நலனை கருத்தில் கொண்டு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 4 சுற்றுலா தலங்களுக்கு கட்டணம் கிடையாது என்று வனத்துறை அறிவித்துள்ளது. வரும் 31ஆம் தேதி வரை கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள கொடைக்கானல், தமிழகத்தில் உள்ள மிகச்சிறந்த கோடை வாசஸ்தலங்களில் ஒன்றாக உள்ளது. தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. கோடை விடுமுறை முடிவடைய இன்னும் ஒரு வார காலமே உள்ள சூழலில் கடந்த சில நாட்களாக கடுமையான கூட்டம் காணப்படுகிறது.

இதனால், கடுமையான போக்குவரத்து நெரிசலும் காணப்படுகிறது. மலைச்சாலையில் பல மணி நேரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை காண முடிகிறது. கடுமையான போக்குவரத்து நெரிசலை தாண்டி கொடைக்கானலுக்கு வந்தால், சுற்றுலா தலங்களிலும் காணும் இடமெல்லாம் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக குணா குகை, பைன் மரக்காடுகள், பேரிஜம் ஏரி போன்ற இடங்களில் எல்லாம் சாரை சாரையாக சுற்றுலா பயணிகள் செல்வதை காண முடிகிறது.
இந்த நிலையில், கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் நலனை கருத்தில் கொண்டு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 4 சுற்றுலா தலங்களுக்கு கட்டணம் கிடையாது என்று வனத்துறை அறிவித்துள்ளது. தூண்பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மேயர் சதுக்கம் ஆகிய பகுதிகளுக்கு செல்ல கட்டணம் கிடையாது என்று வனத்துறை அறிவித்துள்ளது. வரும் 31ஆம் தேதி வரை கட்டணம் இன்றி சுற்றுலா பயணிகள் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்காக கியூஆர் கோடு மூலம் வனத்துறையினர் டிக்கெட் கட்டணம் வசூலிக்கிறார்கள். பின்னர் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்கு செல்லும் போது இந்த டிக்கெட்டை பரிசோதித்த பிறகே வனத்துறை அனுமதித்து வந்ததால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
இதனையடுத்து முதல்வர் விஜய் அறிவுறுத்தலின் பேரில், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு கட்டணம் இன்றி சென்று வரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு சுற்றுலா பயணிகள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications