பாக்யராஜ் அரண்டு போயிட்டாரு.. கிடுகிடுனு ஆடிய நடிகை "சாவித்திரி தலை".. "ஏம்ப்பா அழறே"? உருகிய மனிதம்
சென்னை: நடிகை சாவித்திரியின் குணாள குணம் குறித்த செய்திகள் இணையத்தில் வட்டமடிக்கின்றன.. அவரது ஈகை குணத்தை குறிப்பிட்டு, அவரது ரசிகர்கள் அவ்வப்போது நெகிழ்ந்து விடுகிறார்கள்.
மகா நடிகை - சாவித்திரி என்றாலே இன்னமும் அவருக்கான ரசிகர்கள் ஏராளம். ஆந்திரா - தமிழ்நாடு என சாவித்திரியை ரசிகர்கள் உச்சிமுகந்து கொண்டாடினார்கள். அவரது வீட்டில், திரும்பும் திசையெல்லாம் ஷீல்டுகள் - கேடயங்கள் - பதக்கங்கள் இருக்குமாம்.. அவரது உதவும் குணம்தான், சாவித்திரியை இன்றுவரை உயர்த்தி பிடித்து வருகிறது.

வறுமையின் பிடியில்: வறுமையில் சூழ்ந்திருந்த நேரமது.. ஒரு ரசிகர் சாவித்திரியை தேடி வந்தார்.. அவருக்கு ஏதோ பணஉதவி தேவையாக இருந்திருக்கிறது.. ஆனாலும் தன்னை நம்பிக்கொண்டு வந்துவிட்டாரே என்று தவித்தார் சாவித்திரி..
இருந்தாலும், 2 மணி நேரம் கழித்து அந்த ரசிகரை வரச்சொன்னார். அந்த 2 மணி நேரத்துக்குள், வீட்டில் அந்த ஷீல்டுகளையும், பீரோ முழுக்க இருந்த விலையுயர்ந்த பட்டுப்புடவைகளையும் கொண்டு போய் விற்றுவிட்டார்.. அதில் கிடைத்த 10 ஆயிரம் ரூபாயை ரசிகரிடம் தந்து அனுப்பி வைத்தார் - இதுதான் சாவித்திரி.
புகழின் உச்சி: புகழின் உச்சத்தில் இருந்தபோதும் சரி, வறுமையின் பிடியில் சிக்கியிருந்தபோதும்சரி, ஈரமனசுடன் நடமாடிய பெண்மணி.. நடிப்பிலும் பண்பிலும் அடையாளமாக திகழ்ந்த அந்த நடிகையை பற்றி ஒருமுறை, டைரக்டர் பாக்யராஜ் எழுதியிருந்தார். முதன்முதலில் சாவித்திரியை சந்தித்தது பற்றின நிகழ்வை உருக்கமாக பாக்யராஜ் நினைவூட்டியிருந்தார்.
பாக்யராஜ் சினிமாவுக்கு வந்த புதிது.. ஷூட்டிங்கையே கூட பார்த்திராத தருணம். இயக்குநர் பாலகுரு அவருக்குப் பழக்கமாகியிருக்கிறார்.. அவருடைய படபிடிப்பை முதன்முதலாக பார்த்துக்கொண்டிருந்த தருணத்தில், இயக்குநர் பாலகுரு அழைத்து, "நீ போய் சாவித்திரி அம்மாவை அழைத்து வா" என்றாராம்..
முதல்முறையாக: அதிர்ந்து விட்டாராம் பாக்யராஜ். திரைப்படங்களில் அண்ணாந்து பார்த்து அதிசயித்த சாவித்திரியை நான் நேரில் சென்று அழைத்து வருவதா? என்று ஆர்வமுடன் உடனே ஓடுகிறார். கதவைத்தட்டுகிறார் "எஸ்" என்ற ஒற்றைச் சொல்லால் கதவு திறக்கிறது. உள்ளே சென்றால் திரைப்படத்தில் பார்த்த சாவித்திரி அங்கில்லை. இரு உப்பிய கன்னங்களும் வற்றி ஒட்டிப்போய் ஒல்லியான உருவம் அங்கிருந்தது.
அவரது தலை கிடுகிடுவென ஆடிக்கொண்டிருந்தது. அதை பார்த்துமே அழுகை அழுகையாக வந்துவிட்டது.. பார்த்தவுடன் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்தது.
"ஏம்பா அழறே" என்கிறார் சாவித்திரி.
"இல்ல, உங்களைத் திரைப்படத்தில் அப்படி பார்த்திருக்கிறேன். இப்போ இப்படி பார்க்க வேதனையாக இருக்குமா.. அதான் அழுகை வந்து விட்டது" என்றதற்கு ஒரே ஒரு சிறு புன்னகை உதிர்த்துவிட்டு நின்றார் சாவித்திரி.
மெல்ல சுதாரித்துக்கொண்டு், "ஷாட்டுக்கு வரச் சொன்னார்களா" என்றார்.
"ஆமாம்" என பாக்யராஜ் சொல்ல, "இதோ வருகிறேன்" என கிளம்ப தயாரானார்.
அப்படியே உறைந்துவிட்ட பாக்யராஜ், "சினிமா மீதிருந்த பிரமிப்பே உடைந்து விட்டது" என்று தன்னுடைய அதிர்ச்சியையும் அனுபவத்தையும் பதிவு செய்திருந்தார்.
மனிதாபிமானம்: எனினும், சாவித்திரியை போல வாழ்க்கையின் உயரத்தை தொட்டவர்களும் யாரும் இல்லை, அதேபோல், வாழ்க்கையின் துயரத்தை தொட்டவர்களும் யாரும் இல்லை என்று பரவலாக சொல்வார்கள்.. ஆனாலும், வாழும் காலத்தில் செய்யும் நற்செயல்களும், உதவிகளும், ஒருவரின் இறப்புக்கு பின்னரும் பேசப்படும் என்பதற்கு சாவித்திரியும் மிகச்சிறந்த ஒரு உதாரணம்..!!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications