சரோஜாதேவி வீட்டுக்கு.. டக்குன்னு வந்த நடிகர்.. கூடவே ஜானகி.. "ஆயிரம் சூரியன்" எம்ஜிஆரின் மாண்பு
சென்னை: இன்றைய இளைய தலைமுறையினர், மக்கள் திலகம் எம்ஜிஆரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய உயர்ந்த பண்பு ஒன்று உள்ளது என்று சரோஜாதேவி பூரித்து சொல்கிறார்.. என்ன அது?
தமிழ் சினிமாவில், தயாள குணம் படைத்த மனிதர் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது நடிகர் எம்ஜிஆர்தான்... அந்த அளவிற்கு இவரது குணத்தை பற்றி, இன்று வரை மீடியாவில் வெளிவந்தவண்ணம் உள்ளது.

அதிலும் எம்ஜிஆருடன் நடித்த நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்ட திரைக்கலைஞர்கள் பல்வேறு அனுபவங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். எம்ஜிஆரின் சிறப்பியல்புகளையும், வள்ளல் குணத்தையும், தமிழக மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டிருப்பதற்காகவே, எத்தனையோ மன்றங்கள், இயக்கங்கள் எம்ஜிஆர் பெயரில் இன்றும் செயல்பட்டு வருகின்றன..
சரோஜாதேவி: அந்தவகையில், எம்ஜிஆருடன் நெருங்கிய தொடர்புடையவரும், மூத்த பத்திரிகையாளரான, இதயக்கனி விஜயன், சிலதினங்களுக்கு முன்பு, பிரபல நடிகை சரோஜாதேவியை சந்தித்து பேசும்போது, எம்ஜிஆரின் நல்லியல்புகள் பற்றி சிலாகித்து சொல்லி உள்ளார். சரோஜாதேவி சொன்ன அத்தனை நிகழ்வுகளையும், ஒன் இந்தியா தமிழ் வாசகர்களுக்காக, நம்முடன் இங்கே பகிர்ந்து கொள்கிறார் இதயக்கனி விஜயன்.
உயர்ந்த பண்பு: "என்னை பொறுத்தவரை அவர் மறையவில்லை. ஒவ்வொரு முறையும் அவரது பண்பையும், அன்பையும் ஒருசேர நான் நேரில் பார்த்துள்ளேன். 'நாடோடி மன்னன்' படத்தில்தான் நான் அறிமுகமானேன். இன்னும் சொல்லப்போனால் படத்தில் நான் வரும் காட்சியில் இருந்து தான் வண்ணம் ஆரம்பமாகும். தான் அறிமுகப்படுத்தும் நாயகிக்கு நல்ல முறையில் அறிமுகம் கிடைக்க வேண்டும் என்பதில், அவர் மிகுந்த கவனமாக இருந்தார். பல சமயங்களில் நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கூட அவர் சொல்வார்.

ஆயிரம் சூரியன்: ஷூட்டிங்கில் ஒரு அபாயகரமான காட்சியில் யார் நடித்தாலும்சரி, முதலில் எம்ஜிஆரே நடித்து பிரச்சனை இல்லை என்று தெரிந்த பிறகுதான் சம்பந்தப்பட்டவர்களை நடிக்கச்சொல்வார்.. அவர் செட்டிற்கு வந்தாலே ஆயிரம் சூரியன் வந்ததுபோல் இருக்கும். அந்த தளமே அவ்ளோ பிரகாசமாக ஆகிவிடும். அவரிடமிருந்து பல விஷயங்களை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு யார் நேரில் வந்தாலும், முதலில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, தானே பேச ஆரம்பிப்பார்.
இந்த பண்பு இன்றும் பலரிடம் இல்லை. என்னதான் பெரிய ஆளாக இருந்தாலும், முதலில் நாம் அறிமுகம் செய்துகொண்டால் எதிரில் இருப்பவர் மகிழ்ந்து சகஜமாக பேசுவதற்குத் தயாராகி விடுவார். இதை சின்னவர் (இன்றுவரை அவரை நான் இப்படித்தான் அழைப்பேன். பெரியவர் எங்கள் எல்லோருக்கும் சக்கரபாணி அண்ணன்தான்) பலமுறை செய்து நான் பார்த்துள்ளேன்.
ஜானகி அம்மா: என்னுடைய பிறந்த நாள் ஜனவரி 7. அவருடைய பிறந்த நாள் 17. அவர் என்றுமே தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட மாட்டார். அவரது ரசிகர்கள்தான் கொண்டாடுவார்கள். பலமுறை அவரது பிறந்தநாளில் அவர் படப்பிடிப்பில் இருந்துள்ளார்.. என்னுடைய பிறந்தநாள் அன்று காலையில் எனக்கு வரும் முதல் போன் வாழ்த்து எம்ஜிஆரிடம் இருந்துதான் வரும். என் வீட்டில் என்னுடைய அம்மா சத்யநாராயணா பூஜை செய்வார். ஒருமுறை என் பிறந்தநாளில், திடீர்னு ஜானகி அம்மாவுடன் காலையிலேயே வந்து விட்டார்.
எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.. என் அம்மா சத்யநாராயணா பூஜை செய்து கொண்டிருந்தார். ராமச்சந்திரனும் சத்யநாராயணனும் ஒன்றுதான் என்று என் அம்மா சொன்னதுமே, எதுவுமே சொல்லாமல் என்னை வாழ்த்தி விட்டுப்போனார்கள்..
பிரியாணி: என் அம்மா சொன்னால் நான் என்றுமே தட்ட மாட்டேன்... ஒருமுறை நான் ஆணையிட்டால் படம் என்று நினைக்கிறேன்.. நான் ஷூட்டிங்கில் பிரேக் விட்டதும் டயர்டாக வந்து உட்கார்ந்தேன்.. எனக்கு அசைவ பிரியாணியை தந்தார் எம்.ஜி.ஆர்... இன்னைக்கு சனிக்கிழமை அதனால் நான் அசைவம் சாப்பிட சாப்பிடக்கூடாதுன்னு என் அம்மா சொல்லியிருக்காங்க" என்றேன்..
ஷூட்டிங் 12 மணியை தாண்டிவிட்டது.. உடனே எம்ஜிஆர், "இப்போ சாப்பிடலாமே" என்றார். எங்களைப் பொறுத்தவரை சூரியஉதயமானால்தான் அடுத்தநாள்.. காலையில் 6 மணிக்குதான் அடுத்த நாளே பிறக்கும்.. இதுவும் என் அம்மாதான் சொல்லியுள்ளார்கள் என்றேன்.
இதைக்கேட்டதும், செட்டில் இருந்தவர்களிடம், "இந்த சின்ன வயசிலேயே இந்த பொண்ணு அம்மா பேச்சை தட்டாமல் கேட்கிறா பாரு! என்று பெருமையாக சொன்னார்.. அது இன்னமும் என் காதுகளில் கேட்டுக்கிட்டே இருக்கு.
உயர்ந்த பண்பு: அவர் எப்பொழுதுமே நமது கலாச்சாரம், பண்பாடு இவைகளை பின்பற்றினால் பெருமைப்படுவார். அவரிடம் எந்த ஒரு தீய குணத்தையும் நான் பார்த்ததில்லை. அதேபோல் மற்றவர்களை தப்பாக பேசியதும் இல்லை. இதையெல்லாம் இன்றைய இளைஞர்கள் பின்பற்ற வேண்டிய ஒன்று' என்று பூரித்து சொன்னாராம் அபிநய சரஸ்வதி சரோஜாதேவி.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications