Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆடுகள் வளர்க்க ஆசையா? கோழி, பன்றி வளர்க்கணுமா? மத்திய அரசு தரும் மானியம்.. விவசாயிகளுக்கு குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்காகவும், கால்நடை பராமரிப்பை பலப்படுத்தவும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள உத்யமி திட்டம் குறித்து தெரியுமா? இந்த திட்டத்தின் மூலம் கோழிகள், பன்றிகள் வளர்க்க எவ்வளவு மானியம் வழங்கப்படுகிறது தெரியுமா?

கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரம் சிறக்கவும், அவர்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்தவும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதில் முக்கியமானது, உத்யமி மித்ரா திட்டமாகும்.

udyamimitra goat breeding

விவசாயிகள்: சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களை வளர்க்கும் விதமாக 'உத்யமி மித்ரா யோஜனா' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.. அதன்படி, செம்மறி ஆடுகள், கோழிகள், பன்றிகள், வளர்க்க மானியம் வழங்கப்படுகிறது. புறக்கடை கோழி, செம்மறி ஆடு, வெள்ளாடு, பன்றி வளர்ப்பு, தீவனம் மற்றும் தீவன பயிர் சேமிப்பு மேம்படுத்துதலே இந்த திட்டத்தின் நோக்கமாகவும் உள்ளது.

இதில், தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி மற்றும் பிற உள்ளூர் வங்கிகளோடு இணைந்து ஆடு வளர்ப்புக்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆடுகள்: 100 ஆடுகள் முதல் 500 ஆடுகள் வரை வளர்க்கும் விவசாயிக்கு 50 சதவீதம் மானியம் கிடைக்கும். 100 ஆடுகளை வளர்க்க, ரூ.20 லட்சம் வழங்கும் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 2 முறை தலா ரூ.5 லட்சம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 200 ஆடுகளை வளர்ப்பதற்கு ரூ.40 லட்சமும், 300 ஆடுகளுக்கு ரூ.60 லட்சமும், 400 ஆடுகளுக்கு ரூ.80 லட்சமும், 500 ஆடுகளை வளர்க்க ரூ.1 கோடி திட்டமும் உள்ளது.. இவை அனைத்திற்குமே 50 சதவீதம் தள்ளுபடி உண்டு..

கோழி வளர்க்க, 1,000 நாட்டு கோழிகள் கொண்ட பண்ணை அமைத்து, முட்டை உற்பத்தி செய்து, கோழி குஞ்சு பொரிப்பகம் மூலம் கோழிக்குஞ்சுகள் உற்பத்தி செய்து 4 வார வயது வரை வளர்த்து விற்க மொத்த திட்ட செலவில், மூலதனத்தில் 50 சதவீதம் மானியம், அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை வழங்கப்படும்.

பன்றிகள்: பன்றி பண்ணை அமைக்க 50 பெண் பன்றிகள் அல்லது 100 பன்றிகள் கொண்ட அலகுகள் அமைக்க மொத்த திட்ட செலவில், 50 சதவீதம் மானியம், அதிகபட்சமாக ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை வழங்கப்படும். அதாவது, 100 பெண் பன்றிகள், 25 ஆண் பன்றிகள் உடைய அலகுகள் அமைக்க, மொத்த திட்ட செலவில், மூலதனத்தில், 50 சதவீதம் மானியத்தில் அதிகபட்சமாக, 30 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்பட உள்ளது.

தீவனம் மற்றும் தீவனபயிர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக ஓராண்டில் 2,000 முதல் 2400 மெட்ரிக் டன் வைக்கோல், ஊறுகாய் புல் ஒரு நாளில் 30 மெட்ரிக் டன் மொத்த கலப்பு தீவனம், தீவன கட்டி தயாரித்தல் மற்றும் சேமித்தல் பணிகளை மேற்கொள்ள தளவாடங்கள் வாங்க மொத்த திட்ட செலவில் 50 சதவீதம் மானியம், அதிகபட்சமாக ரூ.ரூ.50 லட்சம் வரை வழங்கப்படும்.

குத்தகை நிலம்: இந்த திட்டத்தின் கீழ் தனி நபர், சுய உதவி குழுக்கள், விவாசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு, விவசாய கூட்டுறவுகள், கூட்டு பொறுப்பு சங்கங்கள் தகுதியானவர்கள் ஆவர் தொழில் முனைவோர் சொந்தமாக அல்லது குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலம் வைத்திருக்க வேண்டும்.

தகுதியுள்ள நிறுவனங்கள் திட்டத்திற்கான வங்கி கடன் அனுமதி அல்லது வங்கி உத்தரவாதத்தை பெற வேண்டும். திட்ட மதிப்பீட்டிறகான அங்கீகாரத்தினையும் பெற வேண்டும்.

இணையதளம்: இந்த திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், https://nim.udyamimitra.in/ என்கிற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம். இணையதளம் வாயிலாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களை இத்திட்டத்தை மாநில அளவில் செயல்படுத்தும் நிறுவனமான தமிழ்நாடு கால்நடை மேம்பாட்டு முகமையின் திட்ட மதிப்பீட்டு குழுவால் பரிசீலிக்கப்பட்டு திட்ட வழிகாட்டுதலின்படி உள்ளவற்றை கடன் வசதி பெற வங்கிக்கு அனுப்பப்படும்.

மத்திய அரசு மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறையின் மூலமாக செயல்படுத்தப்படும் வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில்முனைவோர் மேம்பாடு, கால்நடை உற்பத்தி திறன் அதிகரிப்பு, இறைச்சி, பால், முட்டை, கம்பளி உற்பத்தி அதிகரிப்பதை இலக்காக கொண்டு அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால், விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு பெரிதும் உதவுகிறது..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+