ஈஸ்வரன் சொல்றது கேட்டுச்சா.. கலெக்டரே எதிர்பார்க்கலயாமே.. ஒரே பதிலில் நாமக்கல்லே அசந்து போச்சே..!
நாமக்கல் மாவட்ட குறைதீர் கூட்டத்தில் கொங்கு ஈஸ்வரன் பங்கேற்று வருகிறாராம்
சென்னை: கொங்கு ஈஸ்வரன் குறித்த ஒரு செய்தி இணையத்தில் வட்டமடித்து கொண்டிருக்கிறது.. இதுதான் கொங்கு மண்டலத்தில் ஹாட் டாப்பிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளவர் கொங்கு ஈஸ்வரன்.
பல அறிக்கைகளை வெளியிட்டே ஏகப்பட்ட அதிரடிகளை காட்டி வருபவர்.. எதிர்க்கட்சி தலைவர்களாக விமர்சனங்களையும் முன்வைப்பார். அதேசமயம், அரசியலையும் தாண்டி நட்பு பாராட்டுபவர்.

ஜெய்ஹிந்த்
இப்படித்தான், கடந்த வருடம் ஜெய்ஹிந்த் என்ற ஒற்றை வார்த்தையை மையப்படுத்தி, கொங்கு ஈஸ்வரன் சட்டமன்றத்தில் பேசிய விவகாரம் பெரும் பரபரப்பை அப்போது உண்டாக்கியது. இது தமிழக பாஜகவினருக்கு எக்கச்சக்க கொதிப்பை ஏற்படுத்தியது.. "இந்தியர்களின் ஒருங்கிணைந்த உணர்வு, தேசப்பற்று மற்றும் தேசத்தின் பெருமையைச் சொல்லக்கூடிய "ஜெய்ஹிந்த்" என்ற வார்த்தை நீக்கப்பட்டதை வரவேற்கும் வகையில் ஈஸ்வரன் பேசலாமா? இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது' என்றெல்லாம் பாஜக திரண்டு கடுமையான விமர்சனங்களை முன்வைத்தபோது தன் நிலைப்பாட்டில் உறுதியாக நின்றவர்.

அரசியல் நாகரீகம்
அதேசமயம், அண்ணாமலைக்கு சால்வையை அணிவித்து, பாஜகவின் தலைவராக பொறுப்பேற்றுள்ள தம்பி அண்ணாமலைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு அரசியல் நாகரீகத்தையும் வெளிப்படுத்தியவர்.. இதை பற்றி ஒருமுறை செய்தியாளர்கள் ஈஸ்வரனிடமே கேட்டார்கள்.. அதற்கு அவர், நான் வெற்றி பெற்றதற்கு எனக்கும் அவர் வாழ்த்து சொன்னார். இது ஒரு பரஸ்பரமான அரசியல் நாகரிகம்தானே ஒழிய, வேற எதுவுமில்லை... கொங்கு மண்டலத்துல இருந்து ஒருத்தர் தமிழக பாஜக தலைவர் ஆகியிருக்கும்போது, நான் வாழ்த்து சொல்லணும்தானே? எல்.முருகனுக்கும்கூட நான் சோஷியல் மீடியா மூலமா வாழ்த்து சொல்லியிருந்தேனே என்று முதிர்ந்த பக்குவம் மற்றும் தலைமைப்பண்புடன் விளக்கம் கூறியிருந்தார்.

ஈஸ்வரன் அதிரடி
முதல்வர் ஸ்டாலின் முன்னெடுக்கும் ஒவ்வொரு திட்டத்தையும் மனமார பாராட்டி வாழ்த்து சொல்லி வரும் அதேவேளையில், பிளாஸ்டிக் உற்பத்திக்கு தடை தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டு, மத்திய அரசையும் ஒருமுறை ஈஸ்வரன் பாராட்டியிருந்தார். அதாவது எங்கே நல்ல விஷயம் என்றாலும் தேடிப்போய் பாராட்டு தெரிவித்து விடுகிறாராம் ஈஸ்வரன்.. அதுமட்டுமல்ல, திருச்செங்கோடு எம்எல்ஏ-வான ஈஸ்வரன், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் நடத்தும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டங்களிலும் கடந்த மூன்று மாதங்களாகவே தவறாமல் கலந்து கொண்டு வருவதுதான் பலரது கவனத்தையும் திருப்பி விட்டு வருகிறது.

அசரடித்தார்
பொதுவாக, கட்சி தலைவரோ அல்லது எம்எல்ஏக்களோ, இப்படி குறைதீர் கூட்டங்களுக்கு செல்வதில்லை.. அந்தவகையில் ஈஸ்வரன் தவறாமல் கலந்து கொள்கிறாராம். அத்துடன், விவசாயிகள் சார்பில், கோரிக்கைகள் குறித்து, கலெக்டரிடமே நேரடியாக கேள்வி எழுப்பி விசாரிக்கிறாராம்.. அதனால், குறைதீர் கூட்டத்துக்கு ஈஸ்வரன் வந்தாலே மாவட்ட நிர்வாகத்திடம் நமக்காக குரல் கொடுக்கிறார் என்று விவசாயிகளுக்கு பெருத்த நம்பிக்கை ஏற்படுவதாக சொல்கிறார்கள். கோரிக்கைகளை கேட்டறிந்து உடனுக்குடன் அதை அதிகாரிகளின் கவனத்துக்கும் எடுத்து செல்வதாக சொல்கிறார்கள்.

பலே பலே
அப்படித்தான், இந்த வாரமும் கூட்டம் நடந்துள்ளது. இதிலும் பங்கேற்க ஈஸ்வரன் வந்திருக்கிறார்.. அப்போது கலெக்டர் ஸ்ரேயாசிங் ஈஸ்வரனிடம், "உங்களுக்கு தனிப்பட்ட முறையில் ஏதாவது கோரிக்கைகள் இருந்தால் சொல்லுங்கள், நிறைவேற்றித் தருகிறேன்" என்று அக்கறையுடன் கேட்டாராம்.. அதற்கு ஈஸ்வரன், "தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த கோரிக்கைகளும் இல்லை.. வேண்டுமானால் உங்கள் தரப்பில் ஏதாவது கோரிக்கைகள் இருந்தால் சொல்லுங்கள், முதல்வரிடம் சொல்லி நிறைவேற்றித் தருகிறேன்" என்று சொல்லி அசரடித்துவிட்டாராம் ஈஸ்வரன்..!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications