Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2 புயல்..ங்க.. "கரண்ட் போயிடுச்சா.. பத்திரம்".. கண்ட்ரோல் ரூமில் நுழைந்த ஸ்டாலின்.. சி.எம் ஐயா நன்றி

நிவாரண முகாம்களில் தங்கி உள்ளவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்றிரவு மாண்டஸ் புயல் கரையை கடக்க ஆரம்பித்தபோது, சென்னை எழிலகத்திலுள்ள மாநில அவசர செயல்பாட்டு மையத்திற்குள், அவசரமாக நுழைந்த முதல்வர் ஸ்டாலின், மாவட்ட கலெக்டர்களுடன் கலந்துரையாடினார்.. மழை நிலவரம், பாதிப்புகள் குறித்து விசாரித்ததுடன், அவர்களை கவனமுடன் இருக்கும்படியும் முதல்வர் அக்கறையுடன் கேட்டுக் கொண்டார்.

புயல் சின்னம் காரணமாக மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதையடுத்து, சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களிடம் நேரடியாகவே உரையாடினார் முதல்வர் ஸ்டாலின்.

மாவட்டங்களில் கள நிலவரம் குறித்தும், கையில் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஸ்டாலின் அப்போது கேட்டறிந்தார்.. அத்துடன், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடமும் கலந்துரையாடி, நிலைமை குறித்துவிசாரித்தார். அதன் சுருக்கம்தான் இது:

கலெக்டர்கள்

கலெக்டர்கள்

முதல்வர் ஸ்டாலின்: மாமல்லபுரத்தை ஒட்டியிருக்கும் ஊர்களுக்குள், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறதா?

செங்கல்பட்டு கலெக்டர்: இல்லை சார்.. மீனவர்கள் இருக்கும் எல்லா இடமும் பார்த்துட்டோம்.. மாமல்லபுரத்தில் நிவாரண முகாம் மட்டும் திறக்கப்பட்டிருக்கிறது.. 81 பேர் அங்கே இருக்காங்க.. மாவட்டம் முழுவதும் 14 முகாம்களில் 609 பேர் தங்கியிருக்காங்க.. ஆனால் 205 முகாம்களை, நாங்கள் திறந்து வைத்துள்ளோம்.. இரவு நேரத்தில், தேவைப்படும் பட்சத்தில் நாங்கள் அவர்களை அழைத்து கொண்டு வரவும் தயாராக இருக்கோம்..

மொத்தம் இங்கே 51 மீனவ கிராமங்கள் இருக்கின்றன.. 51 மீனவ கிராமங்களிலுள்ள எல்லா மீனவர்களையும் பார்த்து அவர்களது படகுகளையெல்லாம் பத்திரமாக ஒரு பகுதியில் வைத்திருக்கிறார்கள்... மாவட்டத்தில் ரெட் அலர்ட் இருப்பதால் 33 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.... 120 பேரிடர் மீட்புக் குழு வீரர்கள் இங்கேயே தங்கியிருக்கிறார்கள்.. மரங்கள் சேதமடைந்தால் உடனடியாக அதை வெட்டுவதற்கு 150 மிஷின்கள் தயாராக வைத்திருக்கிறோம்.. 105 ஜெனரேட்டர்களை, தண்ணீர் பிரச்சனை இல்லாமல் இருக்க வைத்திருக்கிறோம். ஜேசிபி 80 ரெடியாக இருக்கு.. கரண்ட் கம்பங்கள் 300, மற்றும் 500 பேர் தயார்நிலையில் உள்ளனர்.

 கரண்ட் கட்

கரண்ட் கட்

முதல்வர் ஸ்டாலின்: அங்கே எங்கேயாவது கரண்ட் துண்டிக்கப்பட்டிருக்கிறதா?

செங்கல்பட்டு கலெக்டர்: எங்கேயும் கரண்ட் துண்டிக்கப்படவில்லை சார்.

முதல்வர் ஸ்டாலின்: பார்த்துக்குங்க.. புயல் உங்கள் பகுதியில்தான் கடக்க போகிறது.. அதனால், மிகவும் கவனத்துடன் பார்த்துக்கொள்ளுங்கள்... Monitoring Officer உங்களுடன் இருக்கிறாரா.. கலெக்டர் எல்லாம் சொன்னார், நீங்களும் பார்த்துக்கொள்ளுங்கள்.

முதல்வர் ஸ்டாலின்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உங்களது நிலவரம் என்ன?

காஞ்சிபுரம் கலெக்டர்: சார். மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 3 கனஅடி தண்ணீர் வெளியேற்றி கொண்டிருக்கிறோம்... முகாம்களில் 1200 பேரை தங்கி இருக்கிறார்கள்.. அவர்களுக்கு சாப்பாடு, பால், குடிநீர் வசதி ஏற்பாடு செய்து தந்துள்ளோம்.. மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் ஒவ்வொரு முகாமுக்கும் சென்று பார்வையிட்டு வருகிறார்கள்.. இங்கு இன்னும் நிறைய பேர் வர வாய்ப்புண்டு... தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை சமாதானம் செய்து, பாதுகாப்பாக அழைத்து வந்துகொண்டிருக்கிறோம்.

முதல்வர் ஸ்டாலின் : நள்ளிரவு 12 மணி முதல் 1 மணி வரை பலத்த மழை பெய்யுமாம்.. கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

 சுருக்கமா சொல்லுங்க

சுருக்கமா சொல்லுங்க

முதல்வர் ஸ்டாலின்: வணக்கம்.. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை நிலவரம் எப்படி இருக்கு? சுருக்கமாக சொல்லுங்கள்.

விழுப்புரம் கலெக்டர்: இங்கே நிவாரண முகாமிற்கு வந்திருக்கிறோம்.. பக்கத்திலேயே இலங்கைவாழ் தமிழர்கள் முகாமும் உள்ளது.. அங்கு ஓட்டுவீடு, கூரை வீடாக இருக்கிறது. எல்லோரையும் ஒரு கல்யாண மண்டபத்தில் தங்க வைத்திருக்கிறோம்... அவர்களுக்குத் தேவையான சாப்பாடு தயார் செய்திருக்கிறோம்... அதை பார்வையிடுவதற்காக நாங்கள் இங்கு வந்திருக்கிறோம்.

முதல்வர் ஸ்டாலின்: எவ்வளவு பேர் அங்கே தங்கியிருக்காங்க?

விழுப்புரம் கலெக்டர்: இந்த கல்யாண மண்டபத்தில் 257 பேர் தங்கியிருக்காங்க.. இலங்கைவாழ் தமிழர்கள் முகாமில் உள்ள எல்லாரையுமே அழைத்து வந்துவிட்டோம்.. மெடிக்கல் கேம்ப் ஒன்றையும் தயாராக வைத்திருக்கிறோம்.. தேவையான சாப்பாடு வசதி தந்துள்ளோம்.. மரக்காணம், மாடூரில் 12 புயல் மையங்கள் வைத்திருக்கிறோம்... இந்தக் கடலோரப் பகுதியில் உள்ளவர்களையும், தாழ்வான பகுதியிலுள்ளவர்களையும், இந்த புயல் மையத்திற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.. சாப்பாடு வசதி, பாய், போர்வை போன்றவை வாங்கி தந்துள்ளோம்.


முதல்வர் ஸ்டாலின்: மீனவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?

விழுப்புரம் கலெக்டர்: 19 கிராமங்களிலுள்ள மீனவர்கள் எல்லாரையுமே நிவாரண மையத்திற்கு அழைத்து வந்துவிட்டோம். சாப்பாடும் வழங்கி வருகிறோம்..

முதல்வர் ஸ்டாலின்: தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் யாரையாவது பேச சொல்லுங்கள்.

முதல்வர் ஸ்டாலின்: வணக்கம் அம்மா, வணக்கம்.

முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பெண்மணி: அய்யா வணக்கம்.

முதல்வர் ஸ்டாலின்: அம்மா, நீங்கள் எந்த ஊர்?

பெண்மணி: ரொம்ப சந்தோஷம் ஐயா, அங்கே போங்க, இங்கே போங்க என்று கேர் எடுத்து, 5 பஸ்களில் எங்களை ஏற்றி கொண்டு வந்தார்கள்.. பத்திரமா வந்துட்டோம்.. சின்ன சின்ன பிள்ளைகளோட பாதுகாப்பான இடத்துக்கு வந்துட்டோம் ஐயோ.. ரொம்ப சந்தோஷம்.. நல்லா கவனிக்கிறாங்க.. இந்த இடம் நீட்டா இருக்குங்க ஐயா.. அதிகாரிகள், எங்களை சாப்பிட்டீங்களான்னு கேட்டு, பக்குவமாக, பாதுகாப்பாக அக்கறையாக இருக்காங்க.. நீங்க ரொம்ப நல்ல முறையில் உதவி செய்றீங்க ஐயா.. நான் மறக்க மாட்டேன் ஐயா..

 ஐயா நன்றி ஐயா

ஐயா நன்றி ஐயா

முதல்வர் ஸ்டாலின்: வணக்கம். கடலூர் மாவட்டத்தின் நிலவரம் எப்படி இருக்கு?

கடலூர் கலெக்டர்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாங்கள் எடுத்திருக்கிறோம்.. லேசான மழையும், காற்றும் தான் இருக்கிறது. மின்சாரத் துறை மூலம் 21 குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.. மின் இணைப்புகள் மீதுள்ள மரங்களை அகற்றி வருகிறோம். சாய்ந்த மின்கம்பங்களை சரி செய்வதற்கு மின் கம்பங்கள் இருக்கின்றன. 400 ஜேசிபி தயாராக இருக்கிறது. 223 தங்கும் இடங்கள் தயார் நிலையில் உள்ளன. அங்கு அதிகாரிகளும் உள்ளனர்.


முதல்வர் ஸ்டாலின்: முகாமில் எத்தனை பேர் தங்கி இருக்கிறார்கள்.

கடலூர் கலெக்டர்: முகாம்களில் தங்க வைக்க வேண்டிய அவசியம் இதுவரை ஏற்படவில்லை சார்

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் மாவட்ட கலெக்டர்களுடன் கலந்துரையாடினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+