சட்டசபை தேர்தலில் போட்டியிட தயாராகின்றனராம் எம்.பி.க்கள்.. அமைச்சர் பதவிக்கு குறி!
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த சில எம்.பி.க்கள் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக படுதீவிரமாக ஆலோசித்து வருகின்றனராம். சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் அமைச்சராகிவிடலாம் என்ற இலக்கோடுதான் இந்த ஆலோசனை நடத்தப்படுகிறதாம்.
தமிழகத்தைச் சேர்ந்த லோக்சபா, ராஜ்யசபா எம்.பிக்கள் பெரும்பாலும் சீனியர்கள்தான். அந்த கட்சி இந்த கட்சி என்றில்லாமல் இவர்களில் சிலருக்கு அமைச்சர் பதவி இல்லாதது பெரும் புலம்பலாக இருந்து வருகிறது.

இதனால் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டால் ஆட்சிக்கு வந்துவிட்டால் அட்லீஸ்ட் மாநில அமைச்சராகிவிடலாமே என கனவு காண்கின்றனராம். இதனால்தான் தமது ஆதரவாளர்களுடன் படுதீவிரமாக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது பற்றி விவாதிக்கின்றனராம்.
ஒருசில எம்.பி.க்கள் சட்டசபை தேர்தலில் நிச்சயம் போட்டியிடுகிறேன்... அதற்காக எம்.பி. பதவியையே ராஜினாமா செய்தும் விடுவேன் என சக எம்.பி.க்களிடம் அசால்ட்டாகவும் கூறி வருகின்றனராம். அதேநேரத்தில் தங்களது கட்சி தலைமையிடம் முதலில் சீட்டுக்கும் அமைச்சர் பதவிக்கும் உறுதி செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர்தான் முடிவெடுப்போம் எனவும் சிலர் தயங்கியும் வருகின்றனராம்.
இப்படி மாநில அமைச்சர் பதவிக்காக எம்பி பதவியை விட்டுக் கொடுக்கும் பிரமுகர்கள் யார்? யார்? என்பதுதான் தமிழக கட்சி நிர்வாகிகளிடையே நடந்து வரும் ஹாட் விவாதமாகவும் இருக்கிறது. இருப்பினும் கட்சிகளின் தலைமைகள் என்ன முடிவெடுக்கும்? அப்படி சரி போட்டியிடுங்கள் என தலைமைகள் முடிவெடுத்தால் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பையும் புயலையும் கூட கிளப்பலாம் என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications