கைவிட்ட கால் டாக்ஸிகள்..சென்னை ஏர்போர்டிற்குள்ளேயே என்ட்ரியான அரசு பேருந்துகள்..அரசு சூப்பர் ஏற்பாடு
சென்னை: நேற்று தொடர் கனமழை காரணமாக சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு வாடகை வாகனங்கள் கிடைக்கவில்லை என்ற புகார் எழுந்தது. வாடகை வாகனங்கள் கிடைக்காமல் மக்கள் தொடர்ந்து அவதிப்பட்ட நிலையில், அவ்வழியாக செல்லும் அரசுப் பேருந்துகள் விமானங்களின் வருகை நேரத்திற்கு ஏற்றவாறு விமான நிலையத்திற்கு உள்ளே சென்று பயணிகளை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
சென்னையில் அதிகப்படியான கனமழை விழுந்த காரணத்தால், நேற்று மக்கள் அத்தியாவசிய சேவைகளுக்கு கூட வெளியில் போக முடியாத அளவிற்கு அவதிப்பட்டன. பல சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், பல முக்கிய நெடுஞ்சாலைகளில் நெரிசல் அதிகமாக இருந்தது.

இதனால் வாடகை கார் ஓட்டுவோர், ஆட்டோ ஓட்டுபவர்கள் பலர் சேவையை ஏற்கவில்லை. ஓலா, உபேர் போன்ற கால் டாக்ஸி சேவைகளும் நேற்று சென்னையில் பல பகுதிகளில் வேலை செய்யவில்லை. குறிப்பாக சென்னை விமான நிலையம் பகுதிகளில் கால் டாக்ஸி சேவைகளே இல்லை...
கனமழையால் ஆட்டோ, கேப் இல்லாத நிலை ஏற்பட்டது. சென்னைக்கு விமானத்தில் வருவதற்கு முன் மழை பெய்து கொண்டிருப்பதை செய்திகளில் பார்த்த பல பயணிகள் வீடு திரும்ப முடியாத நிலை இருந்தது. விமான நிலையம் வந்த பிறகு வாடகை வாகனங்களை புக் செய்தால் புக்கிங் கேன்சல் ஆகிவிடும் நிலை இருந்தது. அதுமட்டுமல்ல 3 மடங்கு விலை இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கனமழை காரணமாக தனியார் வாடகை கார்கள் சவாரி எடுக்க மறுப்பதாக விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் அரசுக்கு புகார் தெரிவித்தார்கள்.
சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு வாடகை வாகனங்கள் கிடைக்கவில்லை என்ற புகாருக்கு உடனே நடவடிக்கை எடுத்த அரசு, தாம்பரம் வழித்தடத்தில் செல்லும் அரசுப் பேருந்துகளை விமானங்களின் வருகை நேரத்திற்கு ஏற்றவாறு விமான நிலையத்திற்கு உள்ளே சென்று பயணிகளை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தது. இன்றும் இதே போல் மாநகரப் பேருந்துகள் சென்னை விமான நிலையத்திற்கு இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். விமான பயணிகளுக்கு இந்த பேருந்து சேவை பெரும் உதவியா இருக்கும்.. இது தொடர்ந்தால் இன்னும் நல்லாருக்கும். தமிழக அரசுக்கு நன்றி என பயணிகள் தெரிவித்தனர்.
-
சென்னை மெரினாவிற்கு வரும் ‘ரோப் கார்'.. இனி வானில் பறந்து கொண்டே பீச்சை ரசிக்கலாம்.. குட்நியூஸ் -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
சென்னை வாடகைதாரர்கள் கவனத்திற்கு! 2026 புதிய வாடகை சட்டத்தில் மாற போகும் அந்த 5 முக்கிய விதிகள் என்ன -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
தரையிறங்க தாழ்வாக பறந்த விமானத்தால்.. 100 வீடுகளின் மேற்கூரைக்கு நேர்ந்த கதி.. அலறியடித்த மக்கள் -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா?












Click it and Unblock the Notifications