அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரே நாளில் மட்டும் 5 பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக வெளியான செய்தியால் ரொம்ப ரொம்ப மனசு துடிச்சு போயிட்டேன் என மக்கள் மேடை அமைப்பின் தலைவர் லதா ரஜினிகாந்த் கவலை தெரிவித்துள்ளார்.

லதா ரஜினிகாந்திடம் அண்மைக்காலமாக வரக் கூடிய குழந்தைகள் மீதான பாலியல் ரீதியிலான வன்முறைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியிருப்பதாவது: நாம் இப்போது வேறு விதத்தில் பிஸியாகி விட்டோம். செல்போனில் மூழ்கி கிடப்பதால் நாம் இதுபோன்ற சம்பவங்களை பார்க்கவோ, அதிலிருந்து பாதுகாக்கவோ இல்லை. ஆக்கப்பூர்வமான பணிகளில் நாம் குறைவாக செயல்படுகிறோம்.

latha Rajinikanth Chennai

இதில் தான் சமுதாயத்தில் வாழும் அடிப்படை மக்களின் பிரச்னைகளைப் பற்றி இவர்கள் கவலைப்படப் போவதில்லை. பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமான விஷயமாகும். ஒவ்வொரு தெருவுக்கும் அது இருக்க வேண்டும்.

இந்த ஊருக்கு, தாங்கள் வசிக்கும் தெருவுக்கு நாங்கள் பாதுகாப்பு இருக்கிறோம் என சொல்லும் அந்த கலாச்சாரம் என்பது வளர வேண்டும். பாதுகாப்பு என்பது சமுதாயத்தில் வசிக்கும் எல்லாருடைய பொறுப்பாகும். நேற்று ஒரே நாளில் மட்டும் 5 பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக வெளியான செய்தியைக் கேட்டு நான் ரொம்ப மனசு துடிச்சு போய் விட்டேன். என்னோட எண்ணம் எல்லாம் அந்த குழந்தையின் மேல் தான் இருக்கிறது. இந்த சமூகத்தில் என்னைக் காப்பாற்ற யாருமே இல்லையா என அந்த குழந்தை நினைத்திருக்கும்.

அந்த குழந்தை அப்படிப்பட்ட ஆபத்தில் போய் ஏன் மாட்டிக் கொண்டது என்பது ஆராய வேண்டும். அப்படிப் பார்த்தால் பெரியவர்களின் கண்காணிப்பு என்பதே இல்லை. இல்லாவிட்டால் நாம் எதைப் பற்றியும் பெரிதாக கவலைப்படாமல் போய்க் கொண்டிருப்பதாலோ, பாதுகாப்பு முறைகளை ஆழமாக கையாளததாலோ தான் அந்த குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு குழந்தை பாதித்தால் கூட அது சமூகத்துக்கு நல்லது இல்லை. அது குற்றங்களுக்கு முன்னுதாரணமாக அமைகிறது. இதனால் திரும்ப திரும்ப குற்றம் நடக்க காரணமாகிறது. எனவே நம் குழந்தைகள் நம்மை எவ்வளவு நம்பியிருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டியிருக்கிறது.

என்னுடைய மக்கள் மேடை இயக்கம் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக நீண்ட காலமாக சொல்லி வருகிறோம். முன்பெல்லாம் கைவிடப்பட்டோ, காணாமல் போய் தான் குழந்தைகள் கொடுமைகள் அனுபவித்தார்கள். இப்போது பார்த்தால் யார் வேண்டுமானாலும் குழந்தைகளை தூக்கிட்டு போகலாம், என்ன மாதிரியான சித்திரவதை வேண்டுமானாலும் அனுபவிக்கலாம் என அவர்கள் எவ்வளவு தான் சித்ரவதை அனுபவிப்பார்கள். இதுபோன்ற பாதுகாப்பு இல்லாத அந்த சூழலை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது என லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அதிலும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் 12 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளன. மணிமங்கலத்தில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பீகார் மாநிலத்தவர் கைது செய்யப்பட்டார்.

கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று, முட்புதரில் வீசிய பீகார் இளைஞர் கைது செய்யப்பட்டார். அது போல் பூந்தமல்லியில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரின் பேரில் அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் கைது செய்யப்பட்டார். அது போல் ஆண்டிப்பட்டியில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த 45 வயது நபர் கைது செய்யப்பட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+