சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது
சென்னை: சென்னை அம்பத்தூரில் காணாமல் போன இரண்டு சிறுமிகளை ரகசிய இடத்தில் அடைத்து வைத்து அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கில், ஆவடி மாநகர போலீசாரால் மனோஜ், ராஜா ஆகிய இரு இளைஞர்கள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அம்பத்தூர் பகுதியில் வசித்து வரும் இரண்டு சிறுமிகள் திடீரென காணாமல் போனதாகக் கூறி, பதறிப்போன பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டையில் இறங்கினர். விசாரணையின் போது, சந்தேகத்தின் அடிப்படையில் அப்பகுதியைச் சேர்ந்த மனோஜ், ராஜா ஆகிய இரண்டு வாலிபர்களைப் பிடித்து போலீசார் தங்களது பாணியில் விசாரித்தனர்.

அப்போது வெளிவந்த வாக்குமூலம் அதிர்ச்சியூட்டுவதாக அமைந்தது. அந்த இரு நபர்களும் சேர்ந்து அச்சிறுமிகளைக் கடத்திச் சென்று, ஒரு ரகசிய அறையில் அடைத்து வைத்துத் தொடர்ந்து பாலியல் தொல்லை தந்து வந்தது அம்பலமானது. குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து அந்த இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அம்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று தான் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அம்பலத்திற்கு வந்தது. அதற்கு இன்னொரு வன்கொடுமை சம்பவமும் ஒரே மாவட்டத்தில் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கும்மிடிப்பூண்டி அருகே பிகார் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் பீகார் மாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று காலை (ஜூன் 15) உயிரிழந்துவிட்டதாக, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை டீன் கூறினார்.
'இந்தச் சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டிருக்கலாம்' எனத் தகவல் பரவிய நிலையில், ஒருவர் மட்டுமே குற்றச் செயலில் ஈடுபட்டதாக திருவள்ளுர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
பாஜக ஆர்ப்பாட்டம்
பெண்களையும், பெண் குழந்தைகளையும் பாதுகாக்கக் கோரியும் பாலியல் வன்முறை குற்றங்கள் தொடர்ந்து நடைபெறாமல் தடுக்கவும், நடவடிக்கைகள் எடுக்கவும் ஆளும் அரசினை வலியுறுத்தும் விதமாக, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வருகின்ற 18.06.2026 வியாழக்கிழமை காலை 10.00 மணி அளவில் சென்னையில் எனது தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தினை மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி மற்றும் மாநில செயலாளர்
வினோஜ் பி செல்வம் ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்திட மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் அறிவிக்கப்படுகிறார்கள் என பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!














Click it and Unblock the Notifications