தரையிறங்க தாழ்வாக பறந்த விமானத்தால்.. 100 வீடுகளின் மேற்கூரைக்கு நேர்ந்த கதி.. அலறியடித்த மக்கள்
கொச்சி: கேரளாவின் கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக தாழ்வாக பறந்த விமானத்தால் ஏற்பட்ட அதிர்வு மற்றும் சூறைக்காற்றால் 100 வீடுகளின் மேற்கூரைகள் சரிந்து விழுந்தன. இதனால் வீடுகளுக்குள் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.

கேரளா கொச்சி விமான நிலையத்தில் இருந்து சுமார் 4.5 கிலோமீட்டர் தொலைவில் சாந்திநகர் அமைந்துள்ளது. இங்குள்ள வீடுகள் ஓட்டு வீடுகளாக இருக்கின்றன. இங்கு சைமன் என்பவரின் வீடும் உள்ளது.
இந்நிலையில் தான் நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் சைமன் உள்பட அந்த பகுதியில் உள்ள மக்கள் வழக்கம்போல் வீட்டுக்குள் இருந்தனர். இந்த சமயத்தில் கொச்சி விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாட்டிற்கு செல்லும் விமானம் ஒன்று தரையிறங்க தயாரானது.
இந்த விமானம் தரையிறங்குவதற்காக வானில் தாழ்வாக பறந்தது. அப்போது திடீரென்று பலத்த காற்று வீசியது. பெரும் சத்தத்துடன் தாழ்வாக விமானம் பறந்தது. இதனால் ஏற்பட்ட அதிர்வு மற்றும் பலத்த காற்றால் சுமார் 100 வீடுகளின் மேற்கூரைகள் பெயர்ந்து வீட்டுக்குள் வெளியேயும், உள்ளேயும் விழுந்தன. இதனால் வீட்டிற்குள் இருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.
இதில் சைமன் என்பவர் காயமடைந்தார். வீட்டில் மேற்கூரைக்காக போடப்பட்டு இருந்த ஓடு பெயர்ந்து அவர் மீது விழுந்ததால் அவர் காயமடைந்தார். அதாவது பெரும் சத்தம் கேட்டதால் அவர் வீட்டை விட்டு வெளியே ஓடினார். ஆனால் அதற்குள் ஓடு அவரது தோள்பட்டையில் விழுந்தது.
இதுபற்றி அந்த பகுதி மக்கள் கூறுகையில், ''விமானம் தாழ்வாக பறந்தது. இதனால் பலத்த காற்று வீசியதோடு, அதிர்வு ஏற்பட்டது. இதுவே வீடுகளின் சேதத்துக்கு முக்கிய காரணம். இந்த பகுதியில் இப்படியான சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் நடந்துள்ளது. விமான நிலையத்தின் அருகே உள்ள ஓட்டு வீடுகள் தாழ்வாக பறக்கும் விமானங்களின் தாக்கத்தால் சேதமடைவது கடந்த ஓராண்டில் இது மூன்றாவது முறையாகும். பெரிய ஜம்போ ஜெட் விமானங்கள் உட்பட பெரிய விமானங்கள் இயக்கப்படும்போது ஜன்னல்களும், கதவுகளும் அடிக்கடி அதிர்வதோடு, கூரை ஓடுகள், உலோக தகடுகளும் பெயர்ந்து விழுகின்றன'' என்றனர்.
ஆலுவா எம்எல்ஏ அன்வர் சாதத்கூறுகையில்,''பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளருக்கு இழப்பீடு வழங்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்'' என்றார்.
முதற்கட்டமாக சம்பவ இடத்துக்கு சென்று விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ''சைமனின் வீடு சேதமடைந்ததற்கு தாழ்வாக பறந்த விமானமே காரணம்'' என்பதை உறுதி செய்துள்ளனர்.
இதையடுத்து கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு (CIAL) அருகே தாழ்வாக பறக்கும் விமானங்களால் வீடுகள் சேதமடையும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் விமான நிலையத்தின் சிஎஸ்ஆர் (CSR) நிதியில் இருந்து பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான வழிகளை விமான நிலைய அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து சிவில் விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் (DGCA) அறிக்கை கோரியுள்ளது. இதுபற்றி டிஜிசிஏ வான் பாதுகாப்பு பிரிவின்உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ''கொச்சியில் நிகழ்ந்த சம்பவம் பற்றி எங்களுக்கு இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. கொச்சியில் உள்ள டிஜிசிஏ அதிகாரிகளிடம் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளோம்'' என்றார்.
-
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்












Click it and Unblock the Notifications