Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்லாமே டபுள் விலை! இனிமேல் ஒரு பேருந்து கூட அந்த ஹோட்டலில் நிற்காது! அமைச்சர் சிவசங்கர் அதிரடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே சென்னை -திருச்சி நெடுஞ்சாலையின் இரு புறமும் உள்ள வேல்ஸ் உணவகத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

வேல்ஸ் உணவகத்தில் எல்லாமே டபுல் விலையாக இருக்கிறது என்றும் வழிபோக்கர்கள் தானே என்று தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்வதாகவும் பொங்கல் பண்டிகையின் போது சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள் புகார் அளித்ததன் பேரில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள இன்னும் சில உணவகங்கள் மீதும் புகார்கள் வந்திருப்பதால் அங்கும் அரசுப் பேருந்துகள் நின்று செல்ல தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக போக்குவரத்துத் துறை விடுத்துள்ள செய்திக்குறிப்பின் விவரம் வருமாறு;

பயண வழி உணவகங்கள்

பயண வழி உணவகங்கள்

சமீப காலமாக அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் நிறுத்தம் செய்யும் பயண வழி உணவகங்கள் மற்றும் கடைகளில் தரமற்ற உணவுகள் மற்றும் கூடுதல் விலைக்கு தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவது மற்றும் சுகாதாரமற்ற முறையில் கழிவறைகள் பராமரிக்கப்படுவது தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு வரப்பெற்ற புகாரின் அடிப்படையில், அவரது உத்தரவின்படி சாலையோர உணவகங்களின் செயல்பாட்டினை கடந்த இரண்டு நாட்களாக போக்குவரத்துக் கழக உயர் அலுவலர்களால், தீடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கூடுதல் விலைக்கு தின்பண்டங்கள்

கூடுதல் விலைக்கு தின்பண்டங்கள்

19.01.2023 அன்று போக்குவரத்துக் கழக உயர் அலுவலர்கள் தீடீர் ஆய்வு மேற்கொள்ளும் போது, விக்கிரவாண்டி அருகே சாலைகள் இருபுறமும் உள்ள வேல்ஸ் உணவகம் பயணிகளுக்கு சுகாதாரமற்ற முறையில் தரமற்ற உணவு மற்றும் கூடுதல் விலைக்கு தின்பண்டங்கள் வழங்கியதை கண்டறியப்பட்டதன் அடிப்படையில், வேல்ஸ் உணவகத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்லும் உரிமம் ரத்து செய்யப்படுகிறது.

நடவடிக்கை தொடரும்

நடவடிக்கை தொடரும்

அதனைத் தொடர்ந்து, எதிர்வரும் காலங்களில், அங்கீகரிக்கப்பட்ட சாலையோர பிற உணவகங்களும் ஆய்வு செய்யப்பட்டு, குறைகள் கண்டறியப்பட்டால், அதனடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதனை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் உள்ளது.

 பலரது எதிர்பார்ப்பு

பலரது எதிர்பார்ப்பு

பயண வழி உணவகங்களில் போக்குவரத்துத் துறை அலுவலர்கள் எப்போதாவது இது போல் ஆய்வு செய்யாமல் தொடர்ச்சியாக ஆய்வில் ஈடுபட வேண்டும் என்பது தொலைதூர அரசுப் பேருந்துகளில் பயணிப்போரின் கோரிக்கையாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+