சென்னையில் டாக்டருக்கு கத்தி குத்து.. சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டம்!
சென்னை: கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமனையில், மருத்துவருக்கு கத்தி குத்து நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்குற்றத்தில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்ட நிலையில், அரசு மருத்துவர்கள் கத்தி குத்து சம்பவத்தை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். தற்போது சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை கிண்டியில் அமைந்துள்ள பன்னோக்கு அரசு மருத்துவமைனையில், பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்பவர் தனது தாயை சிகிச்சைக்காக அனுமதித்திருந்தார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக இன்று காலை, பணியில் இருந்த பாலாஜி எனும் மருத்துவரை இவர் கத்தியால் குத்தியிருக்கிறார். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த மருத்துவரை, பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் விக்னேஷை மருத்துவமனை பாதுகாவலர்கள் சுற்றி வளைத்து பிடித்திருக்கின்றனர்.

பின்னர் அவர் போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார். அவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தை பல்வேறு தரப்பினரும் கண்டித்துள்ளனர். சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில்,
"எங்களிடமிருந்து சற்று தள்ளி விக்னேஷ் தாய் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீடீரென விக்னேஷ் என்ன நினைத்தார் என தெரியவில்லை. டாக்டரை கத்தியால் குத்தியிருக்கிறார். இதற்கான காரணத்தை போலீஸ் விசாரிக்க வேண்டும். ஏனெனில் மருத்துவர்கள் நோயாளிகளையும், உடன் வருபவர்களையும் சக மனிதர்களாக நடத்துவதில்லை. மருத்துவர்கள் பேசுவது கோபத்தை உண்டாக்கியுள்ளது. எனவே, இப்படி ஏதாவது நடந்ததா என்பதையும் விசாரிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது, "கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜியை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் பாலாஜி அவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன்.
அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம் - காலம் பார்க்காமல் உரிய சிகிச்சை அளிப்பதில் நமது அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது. இப்பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்" என முதல்வர் x பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதேபோல தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான தமிழிசை சௌந்தரராஜன், "கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை மருத்துவர் டாக்டர் பாலாஜி அவர்கள் தாக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது வேதனை அளிக்கக் கூடியது தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது என்பதையே இது காட்டுகிறது.
மருத்துவர்கள் அனைத்து நோயாளிகளையும் பாகுபாடற்ற மனநிலையிலேயே சிகிச்சை அளிக்கிறார்கள் நோயாளியின் உறவினர்கள் தங்கள் உறவினர்கள் நோயோடு போராடுகிறார்கள் என்ற வேதனை அவர்களுக்கு இருக்கலாம் ஆனால் அது மருத்துவர்களை தாக்கும் அளவிற்கு நிலைமை மோசமாக இருக்கக் கூடாது.
மருத்துவர்களுக்கு நோயாளிகளுக்கும் நோயாளிகளின் உறவினருக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்.. ஆனால் மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற தன்மை நிலவுகிறது என்பது வேதனை. மருத்துவர் இதய நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தாலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து இருக்கிறார்.. அவர் பூரண குணமடைய வேண்டும் என்று பிராத்திக்கிறேன். மருத்துவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.
மறுபுறம் சம்பவம் குறித்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்திருக்கிறது. தற்போது சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications