கண்டக்டர் அபிநயா அரசு எலக்ட்ரிக் பேருந்தில் அசத்தல்! வாமிட் சென்சேஷன் இருந்தாலும், கவனம் மக்களே
சென்னை: தமிழக அரசின் போக்குவரத்து கழகம், பொதுமக்களின் தேவைக்காகவும், வசதிக்காகவும் பல்வேறு அதிரடிகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் பயணிகளின் பாதுகாப்பு விஷயங்களில் கூடுதல் கவனங்களை செலுத்தி வருகிறது. இதற்காகவே டிரைவர், கண்டக்டர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கி வருகிறது. இந்நிலையில், பெண் கண்டக்டர் அபிநயாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. என்ன காரணம்?
தமிழ்நாடு அரசு பேருந்துகள் மூலம் பொதுமக்கள் தினசரி பயண தேவைகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதேநேரத்தில், சில்லறை வழங்காதது, பேருந்துகள் குறிப்பிட்ட நிறுத்தங்களில் நின்று பயணிகளை ஏற்றி இறக்காதது போன்ற சிக்கல்களையும் பயணிகள் சந்தித்து வருகின்றனர்.
அரசு மின்சார பஸ்
இந்நிலையில், பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு மின்சார பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகளில் பயணிகளுக்கான அறிவுறுத்தல்கள் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படுகிறது.. எனினும், பேருந்துகளில் பணியாற்றும் நடத்துனர்கள் பயணிகளிடம் மரியாதையுடனும் கனிவுடனும் நடந்து கொள்வது குறித்த விவகாரம் அவ்வப்போது பொதுவெளியில் பேசப்படும் ஒன்றாக மாறி வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில் ஒரு சிறிய செயல், ஒரு பெரிய மாற்றம் என்ற தலைப்பில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
பெரும்பாக்கம்- பிராட்வே வழித்தடத்தில் இயக்கப்படும் 102P மின்சார பேருந்தின் நடத்துனரான அபிநயா என்பவர், பயணத்தின்போது மக்களுக்கு சில விழிப்புணர்வுகளை வழங்கி உள்ளார்.. பெண் நடத்துனர் அபிநயா, பயணிகளிடம் காட்டிய அன்பும், பாதுகாப்பு குறித்த இந்த விழிப்புணர்வு வீடியோதான் சமூக வலைதளங்களில் பலரின் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

பெண் கண்டக்டர் அபிநயா
கண்டக்டர் அபிநயா தன்னுடைய பஸ்ஸில் பயணம் செய்யும் பயணிகளுக்கு முக்கிய அறிவுரையை வழங்கி உள்ளார்.. பஸ்ஸில் உள்ள நவீன வசதிகள், பயணிகள் கடைப்பிடிக்க வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்தெல்லாம் தெளிவாக விளக்கி உள்ளார்.. பயணத்தின்போது பயணிகள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகளை அக்கறையுடன் அபிநயா பேசுவதை, பயணிகளில் யாரோ வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளனர்..
அலாரம் அழுத்தினால் போதும்
அந்த வீடியோவில், "பயணிகள் இறங்க வேண்டிய ஸ்டாப்பிங்கில் பஸ் நிப்பாட்டாமல் போனால், டிரைவருக்கு தெரிவிக்கும்படியாக பஸ் உள்ளேயே அமைக்கப்பட்டுள்ள அலாரத்தை இந்த அலாரத்தை ஜஸ்ட் அழுத்துங்க போதும்..
ஏதேனும் அவசர தேவை அல்லது பஸ் ஸ்டாப்பில் இறங்க தவறினால், அலாரம் அழுத்தினால் எங்கள் ஊழியர்கள் உடனடியாக உங்களுக்கு உதவி செய்வார்கள்..
ஜன்னல் ஓரம் உட்கார்ந்து பயணம் செய்யும் பயணிகள், எக்காரணம் கொண்டும் தலை மற்றும் கைகளை வெளியே நீட்டக் கூடாது. வாமிட் சென்சேஷன் இருந்தால்கூட, எக்காரணம் கொண்டும் தலையை வெளியே நீட்டக்கூடாது.
பயணத்தின்போது சிலருக்கு வாந்தி வருவது போல தோணலாம்.. அந்த சூழலிலும் தலையை வெளியே நீட்ட வேண்டாம், அலாரம் பொத்தானை அழுத்தினால், பஸ் நிறுத்தப்பட்டு, தேவையான உதவி செய்யப்படும்..

சில்லறை தட்டுப்பாடு
எல்லாரும் முடிந்தவரை கையில் சில்லறைகளை வைத்து கொள்ளுங்கள்.. கண்டக்டர், பயணிகளுக்கு இடையே ஏற்படும் சில்லறை தட்டுப்பாட்டை தவிர்க்க இது உதவும்,,..
எல்லாரும் சேஃப்பா பயணம் பண்ணுங்க.. தேங்க்யூ.. உங்கள் எல்லாருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.
பஸ் ஓடிக் கொண்டிருக்கும்போது, பயணிகளிடம் அபிநயா இவ்வாறு பேசி வருகிறார்..ஆனால், புன்னகையுடன் அனைத்து அறிவுரைகளையும் சொல்லி உள்ளது, பயணிகளின் கவனத்தை பெற்று வருகிறது.. சென்னை மாநகரப் பேருந்து ஊழியர்களுக்கு அபிநயாவின் இந்த செயல், ஒரு முன்மாதிரியாகவும் அமைந்துள்ளது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications