அரசு ஊழியர்களுக்கு வந்த ஆர்டர்.. இப்ப மின்துறைக்கும் அறிவிப்பு.. இனி தப்ப முடியாது.. திடீர் உத்தரவு
சென்னை: தமிழக மின்வாரியம் ஒரு முக்கிய நடவடிக்கையை எடுக்க போகிறது. இதுகுறித்த அறிவிப்பும் விரைவில் வரப்போவதாக தெரிகிறது.
சமீபத்தில், என்எம்சி எனப்படும் தேசிய மருத்துவ கவுன்சில் புது அதிரடி ஒன்றை பிறப்பித்திருந்தது.. அதன்படி, நோயாளிகளின் விவரங்கள் அடங்கிய மருத்துவப் பதிவேட்டை அனைவரும் பராமரிக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

அத்துடன், மருத்துவ கல்லூரிகளில் ஆதாருடன் கூடிய பயோமெட்ரிக் வருகைப் பதிவு, மருத்துவ பதிவேடு மற்றும் சிசிடிவி கேமரா பொருத்தும் நடவடிக்கைகளில் சந்தேகங்கள், உதவிகளுக்கு பிரத்யேக இமெயில் முகவரிகளையும் ஆணையம் வெளியிட்டிருந்தது.
பயோமெட்டிக்: ஆதார் பயோமெட்ரிக் வருகைப்பதிவுக்கு [email protected] என்ற இமெயில் முகவரியிலும், மருத்துவப் பதிவேடு நடைமுறைகளுக்கு [email protected] என்ற இமெயில் முகவரியிலும், சிசிடிவி கேமரா பொருத்துவதற்கு [email protected] என்ற இமெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் கேட்டுக் கொண்டிருந்தது.
அதேபோல, புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஒரு உத்தரவு போடப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 1 ம் தேதி முதல் அரசு ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை கட்டாயப்படுத்த வேண்டும் என்று புதுச்சேரி தலைமை செயலாளர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். ஊழியர்கள் சிலர் உரிய நேரத்திற்கு ஆபீசுக்கு வவருவதில்லையாம்... இப்படியெல்லாம் தொடர்ந்து குற்றசாட்டுகள் எழுந்துவந்தநிலையில்,இந்த கிடுக்கிப்பிடி உத்தரவு போடப்பட்டுள்ளது.
மின்துறை: இப்போது, இதே உத்தரவு மின்துறைக்கும் வந்துள்ளது. அதாவது, தமிழக மின் வாரியத்திற்கு, 2,811 பிரிவு அலுவலகங்கள், 744 உப கோட்டங்கள், 176 கோட்டங்கள், 44 மின் பகிர்மான வட்ட அலுவலகங்கள் உள்ளன.
அவற்றில் களப்பிரிவு, கணக்கீடு உள்ளிட்ட பிரிவுகளில் பணிபுரிவோரில், நிறைய பேர் சரியான நேரத்திற்கு அலுவலகம் வருவதில்லையாம்.. தொழிற்சங்கங்களை சேர்ந்த சிலரும் இப்படி வேலைக்கு வராமலே, வருகை பதிவு செய்துவிடுகிறார்களாம். அதனால்தான், ஆதார் எண் இணைப்பு அடிப்படையிலான விரல் ரேகை வருகை பதிவு முறையை அமல்படுத்த, மின் வாரியம் முடிவு செய்திருக்கிறது.
கைரேகை கருவிகள்: அதன்படி, கைரேகை கருவியில் பணியாளர்கள் விரல் ரேகையை பதிவு செய்ததும், "ஆதார் சர்வருக்கு" சென்று சரிபார்த்து, அதற்கு பிறகே வருகைப்பதிவேடு உறுதி செய்யப்படும்.
பணிக்கு வரும் நேரம், பணிமுடியும் நேரமும் உறுதி செய்யப்படும். எனவே, இனிமேல், ஒவ்வொரு அலுவலகத்திலும் கைரேகை கருவிகள் வைக்க, தொடர்பான விபரங்களை அனுப்புமாறு, பகிர்மான வட்டமேற்பார்வை பொறியாளர்களுக்கு, மின் வாரியம் உத்தரவிட்டிருக்கிறதாம்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications