சம்பளம் வருதா? அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு.. இப்படி பயமுறுத்தகூடாது.. தமிழக அரசு அதிரடி
சென்னை: போராட்டத்தில் ஈடுபட போகும் அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு வந்துள்ளது.. இதுகுறித்து, தமிழ்நாடு தலைமை செயலாளர், எச்சரிக்கை ஒன்றையும் பிறப்பித்திருக்கிறார்.
தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை அதாவது பிப்ரவரி 15ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது.

அரசு ஊழியர்கள்: தமிழக அரசின் நிதி நிலைமை சரியானதும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் வேலை நிறுத்த அறிவிப்பினை கைவிட்டு அரசுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். எனினும் அரசு ஊழியர்கள் போராட்டத்தை முன்னெடுப்பதாக தெரிகிறது.
இந்நிலையில், தமிழக அரசின் அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
ஸ்டிரைக் : "தமிழகத்தில் மாநில அரசு ஊழியர்களின் அங்கீகாரம் பெற்ற மற்றும் அங்கீகாரம் பெறாத சங்கத்தினர், நாளை (வியாழக்கிழமை) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக முன்மொழிந்துள்ளனர். தமிழக அரசின் விதிப்படி, அரசின் செயல்பாட்டை பாதிக்கக்கூடிய எந்தவித வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களில் அரசு ஊழியர்கள் ஈடுபடக்கூடாது அல்லது ஈடுபடப்போவதாக பயமுறுத்தக்கூடாது.
அது, அரசு விதிகளை மீறியதாக அமைந்துவிடும். எனவே, இதுபோன்று போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உங்கள் கீழ் உள்ள அலுவலர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். 15-ந்தேதி அன்று அரசு ஊழியர்கள் யாராவது அலுவலகத்திற்கு வரவில்லை என்றாலோ அல்லது இந்த சங்கத்தினர் நிர்ணயிக்கும் வேறு தேதியில் வரவில்லை என்றாலோ அவர்கள் பணிக்கு வரவில்லை என்று கருத வேண்டும்.
அறிவிப்பு: எனவே அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம். இந்த போராட்டம் நடைபெறும் 15-ந்தேதி மருத்துவ விடுப்பு தவிர மற்ற விடுப்புக்கள் அளிக்கக்கூடாது. எனவே அன்றைய தினம் காலை 10.15 மணிக்குள் உங்கள் துறையில் உள்ள பணியாளர்களின் வருகை பற்றி அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications