செப்டம்பர் 17ஆம் தேதி தமிழ்நாட்டில் பொது விடுமுறை.. மிலாது நபியை ஒட்டி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
சென்னை: மிலாது நபி பண்டிகையை ஒட்டி, தமிழ்நாட்டில் அரசு விடுமுறை தேதி செப்டம்பர் 17 ஆம் தேதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக வரும் 16 ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படுவதாக இருந்தது. செப். 17ல் மிலாது நபி கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்ததைத் தொடர்ந்து, அரசு விடுமுறை நாள் மாற்றப்பட்டுள்ளது.
இறைத்தூதர் முகமது நபியின் பிறந்த நாளை இஸ்லாமியர்கள் மிலாதுன் நபி என்ற பெயரில் கொண்டாடி வருகின்றனர். மிலாதுன் நபி அன்று இஸ்லாமியர்கள் புனித நூலான குரானை வாசிப்பதை முக்கியமான கடமையாக கடைபிடித்து வருகின்றனர். இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகையான மிலாதுன் நபி, வரும் செப்டம்பர் 16 ஆம் தேதி கொண்டாடப்படுவதாக இருந்தது.

மிலாதுன் முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பொது விடுமுறை அறிவித்து அரசாணையும் வெளியிடப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த 4 ஆம் தேதி எதிர்பார்க்கப்பட்ட ரபி உல் அவ்வல் மாத பிறை தெரியாததால் வருகின்ற 17 ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனைத் தொடர்ந்து தலைமை ஹாஜி தமிழக அரசிடம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் தமிழக அரசு அலுவலகங்களுக்கு செப்டம்பர் 17 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொது விடுமுறை அளிப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
முன்னதாக செப்டம்பர் 16 ஆம் தேதி மிலாடி நபிக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அரசு விடுமுறையை செப்டம்பர் 17 ஆம் தேதிக்கு மாற்றி மறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் தலைமைச் செயலர் நா.முருகானந்தம் வெளியிட்ட அறிவிக்கையில், "செலாவணி முறிச்சட்டத்தின் அடிப்படையில், செப்டம்பர் 16 ஆம் தேதிக்கு பதில், செப்டம்பர் 17-ம் தேதி மிலாடி நபி பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த பொது விடுமுறையானது அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள் உள்ளிட்டவற்றுக்கும் பொருந்தும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்!












Click it and Unblock the Notifications