அரசு அடையாள அட்டை இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும்… தேர்தல் ஆணையம் புது உத்தரவு
சென்னை: வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பூத் சிலிப் வைத்து வாக்களிக்க முடியாது என்று இந்திய தேர்தல் ஆணையம் திடீரென உத்தரவு பிறப்பித்துள்ளது.
இனி வாக்குச் சாவடி சீட்டு இருந்தாலும், வாக்காளர் அடையாள அட்டை ஆதார் கார்டு, பான் கார்டு போன்ற அரசு அடையாள அட்டைகளில் ஒன்றை வாக்களிக்கும் போது காண்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இதற்கு முன் வாக்காளர்கள் போட்டோ ஒட்டிய பூத் சிலிப்பை அடையாளமாக காட்டி வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால், இதை தவறாக பயன்படுத்தி வாக்களிப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு அதிகளவில் புகார்கள் மற்றும் மனுக்களாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி, வாக்குச்சீட்டு இருந்தாலும் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, பான் கார்டு போன்ற அரசு அடையாள அட்டைகளில் ஒன்று வாக்களிக்கும்போது காண்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.
[Read more: விமானி அபிநந்தனை வரவேற்க கோலாகல ஏற்பாடு... பஞ்சாப் முதல்வர் நேரில் சென்று வரவேற்கிறார்]
மேலும், வங்கி பாஸ்புக், ஆதார் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகம் அளித்துள்ள ஸ்மார்ட் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் வேலை அட்டை, தொழிலாளர் துறை வழங்கிய சுகாதார காப்பீட்டு அட்டை, ஓய்வூதிய ஆவணம், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், எம்எல்சிக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களை காட்டியும் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications