For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விமானி அபிநந்தனை வரவேற்க கோலாகல ஏற்பாடு… பஞ்சாப் முதல்வர் நேரில் சென்று வரவேற்கிறார்

Google Oneindia Tamil News

Recommended Video

    பாகிஸ்தானிலிருந்து இன்று இந்தியா திரும்புகிறார் அபிநந்தன்- வீடியோ

    பஞ்சாப்: முதலமைச்சர் கேப்டன் அம்ரீந்தர் சிங் வாகா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்திய விமானி அபிநந்தனை வரவேற்க அனுமதி அளிக்குமாறு பிரதமர் மோடியிடம் பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அம்ரீந்தர் சிங் அனுமதி கோரியிருந்த நிலையில், வாகா எல்லை செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    விமானி அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைப்பதால் வாகா எல்லையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரம் இந்திய விமானி அபிநந்தனுக்கு பாகிஸ்தானில் உடல் பரிசோதனை நிறைவு பெற்றுள்ளது. இன்று பிற்பகல் 12 மணி அளவில் வாகா எல்லையில் விங் கமாண்டர் அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என கூறப்படுகிறது.

    Punjab Chief Minister welcomes Pilot Abhinanthan at wagah border

    அபிநந்தன் முழு ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வாகா வழியாக இந்தியா வரும் அபிநந்தனை வரவேற்க மேள, தாளங்களுடன் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.

    இதற்கிடையே, இம்ரான் கானுடன் நான் கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன், அவர் சமாதானத்துக்கான முயற்சிகளை மேற்கொள்கிறார். இந்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து சொல்லிக்கொண்டிருந்த போது கூட முதலமைச்சர் கேப்டன் அம்ரீந்தர் தீவிரவாதத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன் தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்றார்.

    [Read more: உலகையே திரும்பி பார்க்க வைத்த பாகிஸ்தான்.. 48 மணி நேரத்தில் ஒரு நாட்டின் முகத்தை மாற்றிய தமிழர்!]

    பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டும் என்று முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் வன்மையாக தொடர்ந்து கண்டித்து வருகிறார். இந்தநிலையில், அபிநந்தனை வரவேற்க கோலாகலமான ஏற்பாடுகள் நடந்து கொண்டுள்ளது. இதில், மத்திய அரசின் முக்கிய பிரதிநிதிகளும் கலந்து கொள்வார்கள் என்ற தகவல் கிடைத்திருக்கிறது.

    English summary
    Chief Minister Capt. Amrinder Singh welcomes Pilot Abhinanthan at wagah border
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X