கொரோனா நோயாளிகளை ஏற்றி செல்லும் தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு தமிழக அரசு கட்டணம் நிர்ணயம்

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளை ஏற்றி செல்லும் தனியார் ஆம்புலன்ஸ்களுக்கான கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா நோயாளிகளை அழைத்து செல்ல சாதாரண ஆம்புலன்ஸ்களில் முதல் 10 கி.மீ.க்கு ரூ.1,500 ஆகவும், பிறகு கூடுதலாக செல்லும் ஒவ்வொரு கி.மீ.க்கும் தலா ரூ.25 ஆக நிர்ணயம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

Government of Tamil Nadu fixes fares for private ambulances transporting corona patients

கொரோனா நோயாளிகள் தனியார் ஆம்புலன்ஸ் வாகனத்தை தொடர்பு கொள்ளும் போது கூடுதல் கட்டணம் கேட்பதாக கூறப்படுகிறது. மருத்துவமனைகளில் மணிக்கணக்காக காத்திருக்க நேர்வதால் அதற்கும் சேர்த்து அதிகக் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உயிருக்கு போராடும் சூழ்நிலையில் பயத்தில் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் கேட்கும் கட்டணத்தை கொடுத்து தான் மருத்துவமனைக்கு போக வேண்டியுள்ளது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் உடலை எடுத்து செல்ல வேண்டுமானால் அதிக கட்டணம் கேட்கின்றனர். இந்த நிலையில், நோயாளிகளை ஏற்றிச் செல்லும் தனியார் ஆம்புலன்ஸ்களுக்கான கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா நோயாளிகளை அழைத்து செல்ல சாதாரண ஆம்புலன்ஸ்களில் முதல் 10 கி.மீ.க்கு ரூ.1,500 ஆகவும், பிறகு கூடுதலாக செல்லும் ஒவ்வொரு கி.மீ.க்கும் தலா ரூ.25 ஆக நிர்ணயம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆக்சிஜன் உள்ளிட்ட அடிப்படை உயிர்காக்கும் கருவிகள் கொண்ட ஆம்புலன்ஸ்களுக்கு முதல் 10 கி.மீ.,க்கு 2 ஆயிரம் ரூபாய் ஆகவும், பிறகு ஒவ்வொரு கி.மீ.,க்கும் தலா ரூ.50 ஆகவும், வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ்களுக்கு முதல் 10 கி.மீ.,க்கு ரூ.4 ஆயிரம் ஆகவும், பிறகு ஒவ்வொரு கி.மீ.,க்கும் ரூ.100 ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

கூடுதலாக சென்றால், சாதாரண ஆம்புலன்ஸ்கள் ஒரு கிலோ மீட்டருக்கு ரூபாய் 25 வசூலிக்கலாம் என்றும் அதிநவீன வசதி கொண்ட ஆம்புலன்ஸ்கள் ரூபாய் 100 வசூலிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கட்டணத்தை மீறி அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+