ரஷ்யா பறக்கும் அரசு பள்ளி மாணவர்கள்! முயற்சி எடுத்த தமிழ்நாடு அரசு.. சாதித்து காட்டிய ஆசிரியர்கள்!
சென்னை: தமிழ்நாடு அரசின் ஊக்குவிப்பில் தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பில் முதற்கட்டமாக 50 மாணவ-மாணவிகள் சென்னை விமான நிலையத்தில் இருந்து ரஷ்யா புறப்பட்டுள்ளனர்.
கொரோனா காலத்தில் முடங்கி கிடந்த அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்த தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தவும் பல்வேறு நிகழ்ச்சிகளை அரசு கல்வி நிறுவனங்களும் மற்றும் தனியார் நிறுவனங்களும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் 'ராக்கெட் அறிவியல்' என்ற தலைப்பில் ஆன்லைன் பயிற்சி திட்டம் தனியார் நிறுவனம் சார்பில் கடந்தாண்டு ஜனவரி 26ம்தேதி தொடங்கப்பட்டது.

பிரமோஸ் ஏவுகணை திட்ட இயக்குநர் விஞ்ஞானி சிவதாணுபிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பில் தமிழகத்தில் உள்ள 56 அரசு பள்ளிகளை சேர்ந்த 500 மாணவர்கள் பங்கேற்றனர். 500 நாட்களை கடந்து நடந்த இந்த பயிற்சி நான்கு கட்டங்களாக நடந்து முடிந்தது. முதல் கட்டத்தில் 500 மாணவர்கள் பங்கேற்றிருந்த நிலையில், இரண்டாம் கட்டத்தில் 220 மாணவர்களும், மூன்றாம் கட்டத்தில் 130 மாணவர்களும் தேர்வாகினர். இறுதியாக 75 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் முதல்கட்டமாக 50 மாணவர்கள், தமிழக அரசின் ஆதரவுடன் ரஷ்யாவில் யூரி ககாரின் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட இன்று புறப்படுகின்றனர். இந்த ரஷ்ய பயணத்திற்கு தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இருந்து 8 மாணவிகள், மதுக்கூர் அரசு பள்ளியிலிருந்து ஒரு மாணவர், திருச்சியை சேர்ந்த 2 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த வெற்றிக்கு பின்னாள் ஆசிரியர்களின் கடுமையான உழைப்பு இருப்பதாக மாணவர்கள் கூறியுள்ளனர்.
சமீபத்தில் இஸ்ரோவின் சந்திரயான் 3 திட்டம் வெற்றியடைந்ததை தொடர்ந்து சாமானிய மக்களுக்கும் விண்வெளி அறிவியல் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த சூழலில் பள்ளி மாணவர்களை ரஷ்ய விண்வெளி மையத்திற்கு அழைத்து செல்வது என்பது மாணவர்களுக்கும், விண்வெளி அறிவியல் மீது அதீத ஈடுபாடு ஏற்படுத்தும் என்று ஆசிரியர்கள் கூறியுள்ளனர். மட்டுமல்லாது விண்வெளி துறையில் ரஷ்யாதான் உலக நாடுகளுக்கு முன்னோடி. அந்நாடு போட்ட பாதையில்தான் நாம் அனைவரும் தற்போது நடந்துகொண்டிருக்கிறோம்.
அவ்வளவு ஏன்? இந்தியாவிலிருந்து முதன் முதலில் விண்வெளிக்கு பறந்த ராகேஷ் சர்மா, ரஷ்யாவின் உதவியால்தான் விண்வெளிக்கு சென்றார். ரஷ்யா தனது சொந்த செலவில் இவரை விண்வெளிக்கு அனுப்பியது. இதன் மூலம் விண்வெளிக்கு பறந்த 128வது மனிதர் என்கிற பெருமையையும் இவர் பெற்றார். எனவே விண்வெளி துறையில் இந்தியாவுக்கு மிகுந்த நெருங்கிய நட்பு நாடாக ரஷ்யா இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பரிசு வேண்டாம்.. நோட்டு கொடுங்க.. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இறங்கிய தவெக அமைச்சர் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
உச்ச நீதிமன்ற தீர்ப்பால் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பெரிய சிக்கல்.. இனி என்ன செய்ய வேண்டும்? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications