வலையில் மாட்டிய ஆளுநர்.. ‛சைன்’ போட்டுட்டு தான் டெல்லி போகனும்! ஆங்கிலத்தில் அலறவிட்ட துரைமுருகன்
சென்னை: தமிழக ஆளுநர் இப்போது வலையில் மாட்டிவிட்டார். அவர் 10 மசோதாவுக்கும் கையெழுத்து போட்டுவிட்டு தான் டெல்லிக்கு போகனும் என சட்டசபையில் அமைச்சர் துரை முருகன் ஆங்கிலம் கலந்த தமிழில் பேசி கவனம் ஈர்த்தார்.
தமிழக அரசு ஒப்புதலுக்காக அனுப்பிய 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்என் ரவி திருப்பி அனுப்பி உள்ளார். இந்நிலையில் இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று நடந்து வருகிறது.

சபாநாயகர் அப்பாவு தலைமையில் இந்த கூட்டம் தொடங்கியது. முதலில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு ஆளுநர் ஆர்என் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான தனித்தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்தார்.
இதையடுத்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான வேல்முருகன் உள்பட பிற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக பேசி 10 மசோதாக்களை மறுஆய்வு செய்யும் முதல்வர் ஸ்டாலினின் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசி வந்தனர். பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதன்பிறகு சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
அப்போது, அவர், ‛‛ஆளுநர் இந்த 10 சட்ட முன்வடிவுகளையும் நிராகரிக்கவில்லை, நிறுத்தி வைத்துள்ளதாக நான் கருதுகிறேன். ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன்பு ஏன் இந்த சட்டசபை கூட்டத்தை கூட்ட வேண்டும்?'' என கேள்வி எழுப்பினார். இதையடுத்து சபை முன்னவரும், அமைச்சருமான துரை முருகன் எழுந்து பதிலளித்தார்.

அப்போது அவர், ‛‛நாளைக்கு (அதாவது நாளை மறுநாள்)வழக்கு விசாரணைக்கு வரும் போது மசோதாக்களை திருப்பி அனுப்பி விட்டேன். என்னிடம் நிலுவையில் இல்லை என ஆளுநர் கூறுவார். அதனால்தான், இன்றே இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ராஜ் பவனுக்கு (கவர்னர் மாளிகை) அனுப்பி வைக்க உள்ளோம். நாளை இது ராஜ்பவனில் இருக்கும்'' என்றார்.
முன்னதாக துரைமுருகன் சட்டப்புத்தகத்தை எடுத்து ஆங்கிலத்தில் உரையாற்றினார். அதாவது மசேதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பும் விதிகளை அவர் மேற்கோள் காட்டி சில வினாடிகள் படித்தார். அதன்பிறகு அதற்கான தமிழாக்கத்தையும் அவர் தெரிவித்தார். அதாவது ‛‛ஆளுநருக்கு அனுப்பும் மசோதாவை அவர் யோசனை கூறி திரும்ப அனுப்பினாலும், யோசனை கூறாமல் திருப்பி அனுப்பினாலும் அதனை ஏற்கலாம் இல்லாவிட்டால் ஏற்காமல் மீண்டும் அந்த மசோதாவை திருப்பி அனுப்ப முடியும். இப்படி அனுப்பும் மசோதாவுக்கு அவர் கட்டாயம் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும். ஆக இப்போது வலையில் மாட்டிவிட்டார். நாளைக்கு வழக்கு வருவதற்கு முன்பு இந்த மசோதாக்கள் ராஜ்பவனில் இருக்கும். அதற்கு கையெழுத்து போட்டுவிட்டு தான் டெல்லிக்கு போகனும்'' என பேசினார். இதை கேட்டவுடன் திமுக எம்எல்ஏக்கள் கை தட்டி வரவேற்றனர். ******
-
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
திமுக போட்டியிடும் தொகுதிகள் எவ்வளவு.. கூட்டணி கட்சிகளுக்காக ஸ்டாலின் எடுக்கும் ரிஸ்க் -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
திருவாடானை தொகுதியில் களமிறங்கும் திமுக? MLA சீட் ரேஸில் யார்?












Click it and Unblock the Notifications