"சனாதனத்தை காலாவதி ஆக்கியது திராவிடம்.. இனி காலாவதியாக வேண்டியது ஆளுநர் பதவிதான்": அமைச்சர் பொன்முடி
சென்னை : திராவிட மாடல் வந்த காரணத்தால் சனாதனம் காலாவதி ஆகிவிட்டது. இனி காலாவதி ஆக வேண்டியது ஆளுநர் பதவி தான் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி கொடுத்துள்ளார். மேலும், திராவிட ஆட்சியில் தான் தமிழ்நாட்டில் உயர்கல்வி வளர்ந்தது என்றும் ஆளுநர் முன்வைக்கும் குற்றச்சாட்டு தரவுகள் அற்றது என்றும் விமர்சித்துள்ளார் அமைச்சர் பொன்முடி.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாடு அரசையும், திராவிட மாடலையும் விமர்சித்துப் பேசியிருப்பது, ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளிடையே பெரும் கண்டனத்தைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, திராவிட மாடல் காலாவதியான கொள்கை, தமிழ்நாட்டில் கல்வியின் தரம் மோசமாக இருக்கிறது என்று ஆளுநர் ரவி கூறியிருக்கிறார். இதற்கு திமுக கடுமையாக எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறது.

செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "இந்தியாவின் தலைசிறந்த 100 கல்லூரிகளில் 18 கல்லூரிகள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. சென்னை பல்கலைக்கழகம் 10வது இடத்திலிருந்து நூறாவது இடத்திற்கு சென்று விட்டதாக ஆளுநர் தவறான தகவலை தெரிவித்துள்ளார். சென்னை பல்கலைக்கழகம் உலக அளவில் 547 வது இடத்திலும் இந்திய அளவில் 12வது இடத்திலும் உள்ளது. அதேபோல் மாநில கல்லூரி இந்திய அளவில் 3வது இடத்தில் உள்ளது. உண்மை நிலவரம் இப்படி இருக்க யார் எழுதிக் கொடுத்த குறிப்பை ஆளுநர் இப்படி தவறாக வாசிக்கிறார் என்று தெரியவில்லை.
திராவிட மாடல் ஆட்சி நடக்கிற இந்த காலகட்டத்தில் தான் கல்வித்துறை மிகச் சிறப்பாக வளர்ச்சி பெற்று உள்ளது. தமிழ்நாடு ஆளுநர் கல்லூரிகளில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவின்போது தமிழ்நாட்டில் கல்வித் தரம் மிகச் சிறப்பாக இருக்கிறது என பேசிவிட்டு இப்போது மாற்றிப் பேசுவது அரசியலுக்காக இப்படி பேசுகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆளுநர் உண்மையான தரவுகளை தேடி அறிந்துகொள்ள வேண்டும். அதன் பிறகு ஏதேனும் தவறு இருந்தால் அவர் சுட்டிக் காட்டட்டும்.
நாங்கள் அரசியல் செய்யவில்லை, ஆளுநர் தான் அரசியல் செய்து வருகிறார். யு.பி.எஸ்.சி படிக்கும் மாணவர்களை அழைத்து அவர்களிடம் சனாதனம் பற்றி பேசி வருகிறார். ஆளுநராக இருப்பவர் இதுபோன்ற அரசியல் பேசுவது தவறான ஒன்று. ஆளுநர் ஒன்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிடையாது. மத்திய அரசினுடைய பிரதிநிதியாக அவர் செயல்பட்டு வருகிறார். மாநில அரசு என்ன சொல்கிறதோ அதற்கு ஏற்ப செயல்பட வேண்டியது தான் ஆளுநரின் கடமையாக இருக்க வேண்டும்.
திராவிடம் காலாவதி ஆகவில்லை. சனாதனம் என்பதுதான் காலாவதி ஆன ஒன்று. திராவிட மாடல் வந்த காரணத்தினால் சனாதனம் காலாவதியாகிவிட்டது. ஆளுநர் பதவி தான் காலாவதி ஆக வேண்டிய ஒன்று. தமிழ்நாட்டில் மட்டும் இருந்த திராவிடம் இன்று அகில இந்திய அளவில் பரவத் தொடங்கி இருக்கிறது. திராவிடம் என்பது சமூக நீதிக்காக, மனித நேயத்திற்காக மக்கள் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது.
திராவிடம் என்பது யாரையும் எதிர்த்து உருவாக்கப்பட்ட கொள்கை அல்ல. திராவிட இயக்கம் பற்றி நான் எழுதிய புத்தகத்தை ஆளுநருக்கு அனுப்பலாம் என்று திட்டமிட்டுள்ளேன். உலகம் முழுவதும் உள்ள சமூக நீதி இயக்கங்களுக்கு வழிகாட்டியாக திராவிட இயக்கம் திகழ்ந்து வருகிறது. திராவிடம் என்பது தமிழ்நாடு, இந்தியா, உலகத்துக்கு ஏற்ற கொள்கை." எனத் தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications