ம்ஹூம்.. சனாதன தர்மத்தை மீட்டெடுக்க வந்தவர்தான் அய்யா வைகுண்டர்... ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டம்!
சென்னை: சனாதன தர்மத்தை எதிர்த்து போராடிய அய்யா வைகுண்டரை தொடர்ந்து சனாதன தர்மத்தை மீட்க வந்தவர் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிடுவது விவாதப் பொருளாகி வருகிறது. அய்யா வைகுண்டரின் பிறந்த நாளிலும், சனாதன தர்மத்தை மீட்டெடுக்கவும் நமது அடையாளத்தையும் கலாசாரத்தையும் அழிக்கத் துணிந்த காலனித்துவ ஆட்சியாளர்களால் நமது மக்கள் கடுமையாக ஒடுக்கப்பட்ட நேரத்தில் விஷ்ணுவின் தெய்வீக அவதாரமாக அய்யா வைகுண்டர் அவதரித்தார் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பதாவது: அய்யா வைகுண்டர் அவர்களின் 193 - ஆவது அவதார தினத்தை முன்னிட்டு, குறிப்பாக இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள அய்யா வழியின் அனைத்து பக்தர்களுக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்கள். சமுதாயத்தைக் காப்பாற்றவும், சனாதன தர்மத்தை மீட்டெடுக்கவும் நமது அடையாளத்தையும் கலாசாரத்தையும் அழிக்கத் துணிந்த காலனித்துவ ஆட்சியாளர்களால் நமது மக்கள் கடுமையாக ஒடுக்கப்பட்ட நேரத்தில், பகவான் விஷ்ணுவின் தெய்வீக அவதாரமாக அய்யா வைகுண்டர் அவதரித்தார். அவர் உலகளாவிய சகோதரத்துவத்தின் சனாதன மதிப்பைக் கற்பித்ததுடன் அனைத்து வகையான சமூக பாகுபாடுகளுக்கும் எதிராகப் போராடினார். அவரது எல்லையற்ற கருணை நம்மை ஒரே குடும்பமாக ஒன்றிணைத்து, ஞானத்தாலும், நல்லொழுக்கத்தாலும் நம்மை வழிநடத்தி, வளமான, நீதி சார்ந்த #வளர்ச்சியடைத்தபாரதத்தை உருவாக்க நம்மை ஊக்குவிக்கட்டும். இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆளுநர் ரவி, திருநெல்வேலியில் அய்யா வைகுண்டர் அவர்களின் 193-ஆவது அவதார தினத்தை கொண்டாடும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இது தொடர்பாக ஆளுநர் ரவி கூறுகையில், சனாதன தர்மத்தின் முக்கிய மதிப்புகளான உலகளாவிய சகோதரத்துவம் மற்றும் இரக்கத்தின் செய்தியை அய்யா அவர்கள் பரப்பினார். பாரதத்தை பலவீனப்படுத்தும் நோக்கத்துடன் சில சுயநலவாதிகள் வெறுப்பையும் பொய்யையும் பரப்பி வரும் நேரத்தில், அய்யா வைகுண்டர் அவர்கள் அருளிய போதனைகள் முன்னெப்போதையும் விட மிகவும் பொருத்தமானவை என தெரிவிவித்திருதார்.
அதற்கு முன்னரும் வைகுண்டரை சனாதன தர்ம மீட்பராக ஆளுநர் ரவி பேசிய போது, அய்யா வைகுண்டர் தலைமைபதி நிர்வாகி பால பிரஜாபதி மறுப்பு தெரிவித்திருதார். அந்த மறுப்பு பதிவில், அய்யா வைகுண்டர் குறித்து புத்தகம் வெளியிடுவது போல் வரலாற்றை திரித்து ஆளுநர் பேசியுள்ளார். ஆரிய கோட்பாட்டிற்கு அணி சேர்ப்பது போல் ஆளுநர் பேசியுள்ளது வருந்தத்தக்கது. அய்யா வைகுண்டர் குறித்து ஆளுநர் புரிந்து பேச வேண்டும். உருவ வழிபாடு, மொழி, பேதம், ஆண், பெண் பேதம், சாதிகள் இல்லை என பல கோட்பாடுகளை கூறியவர் அய்யா வைகுண்டர். அவர் சனாதனத்தை ஆதரித்தவர் என கூறியதை ஏற்கவே முடியாது. அய்யா வைகுண்டரை தனதாக்கிக் கொண்டு பட்டா போடுவதற்காக அவர்கள் பேசுவதை கண்டிக்கிறோம். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நல்ல ஆலோசனைகள் கூறுவதை விட்டுவிட்டு இது போன்ற செயல்களில் ஈடுபடுவதுதான் ஆளுநர் ரவியின் வேலையா? அய்யா வைகுண்டர் சனாதன தர்மத்திற்கு எதிராக போர்க் குரல் கொடுத்தார். சமத்துவம் சகோதரத்துவத்தை வலியுறுத்தினார் என விளக்கம் அளித்திருந்தார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications