போஸ்ட்மேன் வேலையைக்கூட சரியா செய்யல! ஆளுநர் ரவியை கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்.. பரபரப்பு
சென்னை: போஸ்ட்மேன் வேலையை கூட ஆளுநர் சரியாக செய்யாமல் இருப்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகு அல்ல என்று முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
Recommended Video
சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. நீட் விவகாரம், தேசிய கல்விக்கொள்கை, ஆளுநர் அதிகாரம், ஒன்றிய - மாநில அரசுகளின் உறவு உள்ளிட்ட பல விஷயங்களை அடிப்படையாக வைத்து இந்த கூட்டம் நடைபெற்றது.
சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. நீட் எதிர்ப்பு, தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு தொடர் பரப்புரைப் பயண நிறைவு பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.

ஸ்டாலின் பேச்சு
சென்னையில் நேற்று நடைபெற்ற நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். முதல்வர் ஸ்டாலின் தனது உரையில், தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்க.. மக்களின் படிப்பை தடுக்க போடப்பட்ட சதித்திட்டம்தான் நீட். மாநில உரிமைகளை பறிப்பதற்காகவே நீட், புதிய கல்விக்கொள்கை போன்றவற்றை கொண்டு வருகிறார்கள். மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசை ஆளுநர் மதிக்காமல் செயல்படுகிறார். மக்கள் தேர்வு செய்யப்பட்ட அரசு நிறைவேற்றிய ஒரு மாசோதாவை ஒரு நியமன ஆளுநர் திருப்பி இருக்கிறார். இது எந்த விதத்தில் நியாயம். நாம் மீண்டும் மசோதாவை நிறைவேற்றி அனுப்பி இருக்கிறோம்.

ஆளுநர் அதிகாரம்
இதை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதே சரியானதாக இருக்கும். ஆனால் அவர் அதை செய்யவில்லை. இதுதான் மக்களாட்சியா? மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் நலத்திட்டங்களை கொண்டு வந்தால் அதை நியமன பதவியில் இருக்கும் ஒருவர் தடுக்கிறார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை விட.. மக்களை விட ஆளுநர் அதிக அதிகாரம் கொண்டவர் என்று நினைக்கிறாரா?

சட்ட முன் வடிவு
நீட் சட்ட முன் வடிவிற்கு ஆளுநர் ஒன்றும் ஒப்புதல் வழங்க தேவையில்லை. அதற்கான அதிகாரமும் அவருக்கு இல்லை. நாங்கள் சட்டம் இயற்றிவிட்டோம். அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்புங்கள் என்றுதான் கூறுகிறோம். போஸ்ட்மேன் வேலையை ஆளுநர் சரியாக பார்க்க வேண்டும் என்று ஆசிரியர் கீ வீரமணி கூறினார். அந்த போஸ்ட்மேன் வேலையை கூட ஆளுநர் சரியாக செய்யாமல் இருப்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகு அல்ல.

குஜராத் எப்படி?
குஜராத்தில் இப்படி நடந்து இருந்தால்.. அப்போது அங்கு முதல்வராக மோடி இருந்திருந்தால் இதைத்தான் செய்து இருப்பாரா? பாஜக ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் இப்படி இல்லையே.. அங்கு முதல்வர்கள் தங்கள் கடமையை ஆற்ற முடிகிறதே.. அங்கு முதல்வர்களின் செயலில் ஆளுநர்கள் மூக்கை நுழைக்கவில்லையே.. என்று முதல்வர் ஸ்டாலின் மிகவும் கடுமையாக பேசினார். நேற்று தமிழ்நாடு அரசே தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

மசோதா
கடந்த சில மாதங்களாக ஆளும் திமுக அரசு இதற்கான திட்டத்தில் இருந்த நிலையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆளுநர் ரவி ஊட்டியில் பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் மாநாடு நடத்தி வருகிறார். நேற்று இந்த மாநாடு நடக்கும் அதே நேரத்தில்தான் தமிழ்நாடு அரசு மூலம் ஆளுநரின் அதிகாரத்தை பறிக்கும் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில்தான் நேற்று மாலையே ஆளுநர் ரவியை கடுமையாக விமர்சித்து முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications