மேட்டர் ஓவர்.. ஆனா அடுத்த 5 நாள் என்ன பண்ண போகிறார்? ஆளுநர் ரவியின் "கேம்ப்".. நோட்டமிடும் தலைகள்!
சென்னை: ஆளுநர் ரவி தலைமையில் ஊட்டியில் நடைபெற்ற இரண்டு நாள் துணை வேந்தர்கள் மாநாடு முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்று தீவிர எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆளுநர் ஆர் என் ரவிதான் தற்போது தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு வேந்தர். இது அரசியலமைப்பு வழங்கிய உரிமை இல்லை என்றாலும், மாநில அரசுகள் மூலம் வழங்கப்பட்டுள்ள உரிமை ஆகும்.
இதை பயன்படுத்தி ஆளுனர் ரவி கடந்த இரண்டு நாட்களாக துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்தினார். இந்த மாநாட்டிற்கு இணை வேந்தரான உயர் கல்வித்துறை அமைச்சர் பொன் முடி வரவேற்கப்படவில்லை.

எதிர்ப்பு
ஆளும் திமுக தரப்பு ஆளுநரின் இந்த மாநாட்டிற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. ஆளுநர் இப்படி தன்னிச்சையாக மாநாட்டை நடத்துவது சரியல்ல என்று கடுமையான விமர்சனங்களை திமுகவினர் வைத்தனர். முதல்வர் ஸ்டாலினும் சட்டசபையில், ஆளுநர் தனக்கு மட்டுமே உரிமை இருப்பது போல் செயல்படுகிறார். ஆளுநர் ஏதோ இது தன்னுடைய அதிகாரம் என்பது போல செயல்படுகிறார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு ஒன்று, தனக்கு கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தரை நியமிக்க முடியவில்லை என்பது மிகவும் தவறானது, என்று குறிப்பிட்டார்.

சட்ட மசோதா
இந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசால் தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் அங்கு மீட்டிங் நடத்திய அதே நாளில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில்தான் ஆளுநர் நடத்திய இரண்டு நாள் மாநாடு முடிவடைந்துள்ளது.

ஏன் தங்கி இருக்கிறார்?
இரண்டு நாள் மாநாடு முடிந்துவிட்டாலும் மேலும் 5 நாட்கள் அவர் ஊட்டியில்தான் தங்கி இருக்க போகிறார். ஆளுநர் ரவி ஊட்டிக்கு சென்றதே இந்த மாநாட்டில் கலந்து கொள்ளத்தான் என்று கூறப்பட்டது. அந்த மாநாடும் முடிந்துவிட்டது. இன்னும் அவர் 5 நாட்கள் ஊட்டியில் என்ன செய்ய போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரின் ஊட்டி கேம்ப் குறித்து திமுகவின் சில டாப் தலைகள் நோட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

ஊட்டி பயணம்
ஊட்டியில் வேறு யாரையும் அவர் சந்திக்கிறாரா, யாரிடமாவது பேசுகிறாரா என்று நோட்டமிட்டு வருகிறார்களாம். இது அரசியல் ரீதியான ஏதாவது திட்டமிடலா அல்லது சம்மரில் சென்னையில் இருக்க விருப்பமின்றி ஊட்டியில் தங்கி இருக்கிறாரா என்றும் ஆளும் தரப்பை சேர்ந்த சில தலைகள் நோட்டமிட்டு வருகிறார்களாம். ஆளுநர் ஊட்டியில் இருக்கும் நிலையில்தான் துணை வேந்தர்கள் மசோதா ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications