ஆளுநரின் பேச்சு தேவையற்றது.. இப்படி பேசுனதுக்கு காரணம் என்ன தெரியுமா? ஜெயக்குமார் கொடுத்த விளக்கம்
சென்னை: கால்டுவெல் - ஜியு போப் போன்றவர்கள் மக்களை மதமாற்றம் செய்யவே இந்தியா வந்ததாக ஆளுநர் ஆர். என். ரவி நேற்று பேசியிருந்தார். இந்த நிலையில், ஜியு போப் பற்றி ஆளுநர் தேவையற்ற கருத்தை பேசியிருக்கிறார் என்றும், அதிமுகவின் போராட்டத்தை திசை திருப்பவே இப்படி பேசினார் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த மாத இறுதிக்குள் தேர்தல் தேதி அறிவிப்பு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும் தேர்தலை சந்திக்க உள்ளதாக தெரிகிறது. பாஜகவுடன் இனி கூட்டணியே கிடையாது என அதிமுக திட்டவட்டமாக கூறிவிட்டது.

எனினும் பாஜக இன்னமும் அதிமுகவுடன் கூட்டணி வைக்கவே விருப்பபடுவதாக தெரிகிறது. இதனை நிரூபிக்கும் வகையிலேயே பிரதமர் மோடி ஒவ்வொரு முறை தமிழகம் வரும்போது அதிமுகவை விமர்சித்து பேசியதில்லை. திமுகவை கடுமையாக விமர்சிக்கும் நிலையில், ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரை பாராட்டி பேசுகிறார். ஆனால் இதற்கு மாறாக அதிமுகவோ பாஜகவை விமர்சித்தே வருகிறது.
அந்த வகையில் தான் நேற்று ஆளுநர் ரவி ஜியு போப் பற்றி கூறிய கருத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்து பதில் அளித்துள்ளார். ஜெயக்குமார் கூறுகையில், "ஆளுநர் ஆர் என் ரவி ஜியு போப் பற்றி தேவையற்ற கருத்தினை தெரிவித்துள்ளார். அவர் அப்படி பேசி எங்களது போராட்டத்தை திசை திருப்ப முயன்றுள்ளார்" என்று கூறினார்.
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து இருப்பதாகவும், இதனை தடுக்காமல் திமுக அரசு வேடிக்கை பார்ப்பதாகவும் கூறி, போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த திமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி நேற்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தை திசை திருப்பவே இப்படி ஆளுநர் ஆர் என் ரவி பேசியதாக ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற அய்யா வைகுண்டரின் 192 வது அவதார தினவிழா நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி பேசுகையில்"அதர்மத்தை அகற்றுவதற்காக கடவுள் நாராயணன் மனித அவதாரம் எடுத்துள்ளார். அந்த வரிசையில்தான் 192 ஆண்டுகளுக்கு முன்பு அய்யா வைகுண்டசாமியாக நாராயணன் அவதாரம் எடுத்து வந்தார். அப்போதிருந்த சமுதாய ஏற்றத்தாழ்வுகளை அகற்றி சமத்துவத்தை கொண்டுவர முயற்சித்தார்.
சனாதன தர்மத்தை கற்றுக்கொடுத்தார். ஐரோப்பாவை கிறிஸ்தவம் அடையும் முன்பே இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் ஆட்சியை ஏற்படுத்தியதுபோல இந்தியாவில் ஆட்சி அமைக்க முடியாது என்பதை அறிந்தனர். அதனால் சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டனர். ஜியு போப், கால்டுவெல் போன்றவர்கள் பள்ளி படிப்பை கூட முடிக்காதவர்கள்.
மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதற்காகவே ஜியு போப், கால்டுவெல் இந்தியாவிற்கு வந்தனர். கால்டுவெல், ஜி.யூ.போப் ஆகியோர் மெட்ராஸ் மாகாணத்திற்கு அனுப்பப்பட்டு, மிக வலிமையாக , மதமாற்றத்தையும் செய்ய தொடங்கினர். இயேசுவையும் பைபிளையும் எனக்கு பிடிக்கும். சனாதன தர்மத்தை காக்கவே 192 ஆண்டுகளுக்கு முன்பு அய்யா வைகுண்டர் தோன்றினார். சனாதன தர்மத்தின் கோட்பாட்டை கிழக்கிந்திய கம்பெனியினர் அழித்தனர். இந்தியாவை ஆட்சி செய்வதற்கு மதமாற்றம் என்ற கொள்கையை பிரிட்டிஷ் அரசு மேற்கொண்டது. சனாதன கோட்பாட்டின் அடிப்படையில் மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள்" என்று பேசியிருந்தார்.
-
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications