தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல்.. முக்கியமா இந்த மசோதா!
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அதேபோல், 2 முறை நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு நிதி நிர்வாக பொறுப்புடைமை மசோதாவுக்கும் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
மேலும் முன்னாள் எம்எல்ஏக்களின் ஓய்வூதியத்தை உயர்த்துவது, சிறு குற்றங்களுக்கு சிறைத் தண்டனைக்கு பதிலாக அபராதம் விதிக்கும் மசோதா உள்பட 9 மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த அக்டோபர் 14 முதல் அக்டோபர் 17 ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது. இதில் தனியார் பல்கலைக்கழகங்கள், சித்த மருத்துவ பல்கலைக்கழகம் உருவாக்கும் சட்டம் உட்பட 18 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரியில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நிதி பொறுப்புடைச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல், மசோதாவை திருப்பி அனுப்பினார். அப்போது, "இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடப்பதால், அடுத்த நிதி ஆண்டுக்கும் நிதி ஒதுக்குவது சரியல்ல" என கடிதம் அனுப்பியிருந்தார். மேலும், மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், இந்த மழைக்கால சட்டசபைக் கூட்டத்தில், ஆளுநரின் கருத்துகளை நிராகரித்ததுடன், மசோதா மீண்டும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், ஆளுநருக்கு இரண்டாவது முறையாக அனுப்பப்பட்ட இந்த மசோதா உட்பட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
குறிப்பாக, தமிழ்நாடு நெடுஞ்சாலைகள், கடல் சார் வாரியம், தமிழ்நாடு மின் நுகர்வு அல்லது விற்பனை வரி திருத்த மசோதாக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், எம்சி-க்களுக்கான ஓய்வூதிய உயர்வுக்கான தமிழ்நாடு சம்பளம் வழங்கல் திருத்த மசோதா, சிறு குற்றங்களுக்குச் சிறைத் தண்டனைக்கு பதிலாக அபராதம் விதிக்கும் மசோதா உள்ளிட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
-
பைக்கில் பள்ளிக்கு வரும் மாணவர்களா நீங்க? உஷார்.. தமிழக பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications