ஆன்லைன் ரம்மி தடை மசோதா.. திருப்பி அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி.. திருத்தங்கள் செய்ய அறிவுறுத்தல்!
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்.
சென்னை: ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை கடந்த நான்கு மாதங்களாக ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் வைத்திருந்த நிலையில், தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். அதில் மீண்டும் சில திருத்தங்களை செய்து அனுப்பும்படி ஆளுநர் மாளிகை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களால் தமிழ்நாட்டில் தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் அதிகரித்ததால் கடந்த அதிமுக ஆட்சியில் 2020ம் ஆண்டு நவம்பரில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. 2021 பிப்ரவரியில் பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது.
அச்சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அச்சட்டம் செல்லாது என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி தீர்ப்பளித்தது.

மசோதா நிறைவேற்றம்
இதையடுத்து மீண்டும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்காக கடந்த ஆண்டு செப்டம்பரில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடா்ந்து, அக்.19ம் தேதி சட்டசபை கூட்டப்பட்டு, மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அதேசமயம், அவசர சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது. அரசாணை மட்டும் பிறப்பிக்கப்படாமல் இருந்தது.

தமிழ்நாடு அரசு விளக்கம்
பின்னர் ஆளுநா் கோரியதன் அடிப்படையில், இந்த மசோதா தொடா்பான உரிய விளக்கங்களும் அளிக்கப்பட்டது. ஆனாலும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கால தாமதம் செய்து வந்தார். இதன் காரணமாக கடந்த டிசம்பர் மாதமே அந்த தடைச் சட்ட மசோதா காலாவதியாகிவிட்டது.

தற்கொலைகள் அதிகரிப்பு
சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து ஆன்லைன் ரம்மி ஆப்களில் பணம் செலுத்தி விளையாடுவது தவிர்க்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தடைச் சட்டம் மசோதா காலாவதியாகி விட்ட நிலையில், சட்டம் நிறைவேற்றப்படாததால் மீண்டும் ஆன்லைன் ரம்மி சூதாட்டங்கள் அதிகரித்துள்ளன. அதேபோல் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு பெற்ற கடன் தொல்லை காரணமாக 40க்கும் அதிகமானோர் தற்கொலை செய்துகொண்டனர். இதனால் ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடை மசோதாவிற்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வந்தனர்.

திருப்பி அனுப்பிய ஆளுநர்
இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். தமிழ்நாடு அரசு இரண்டாவது முறையாக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய சட்ட மசோதா திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை 4 மாதங்களாக ஆளுநர் கிடப்பில் வைத்திருந்த நிலையில், தற்போது திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. மேலும், சில திருத்தங்களை செய்து மீண்டும் அனுப்பும்படி ஆளுநர் மாளிகை தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications