Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அந்த பதவிக்கே இழுக்காம்".. பட்டென வெளியேறிய ஆளுநர்! திரும்பி பார்த்த வடக்கு! தேசிய அளவில் விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளுநர் ஆர். என். ரவி இன்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த சம்பவம் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

தமிழ்நாடு சட்டசபையில் இருந்து ஆளுநர் ஆர். என். ரவி இன்று வெளியேறிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று முதல் நாள் கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர். என். ரவி தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை வாசிக்காமல், சுயமாக சில வார்த்தைகளை சேர்த்து, தமிழ்நாடு அரசின் முக்கியமான சில பத்திகளை பேசாமல் தவிர்த்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆளுநர் ஆர். என். ரவி தமிழ்நாடு அரசு எழுதிக்கொடுத்த உரையை வாசிக்காமல் விட்டது கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும் இதற்கு கண்டனம் தெரிவித்து அவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றினார்.

 விவகாரம்

விவகாரம்

இந்த விவகாரம் தற்போது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. வடஇந்தியாவில் உள்ளவர்கள் பலரும் இந்த விவகாரம் பற்றி பேச தொடங்கி உள்ளனர். தேசிய அளவில் பல்வேறு பிரச்சனைகள் பற்றி பேசும் திலீப் மண்டல் இந்த விவகாரத்தில் குரல் கொடுத்துள்ளார். மண்டல் கமிஷனை தலைமை தாங்கிய மண்டலின் மகன் திலீப் மண்டல் இதில் கடும் விமர்சனங்களை ஆளுநர் ஆர். என். ரவிக்கு எதிராக வைத்து இருக்கிறார். ஆளுநர் செய்தது தவறு, அவர் அப்படி செய்ய கூடாது, அவரின் செயல்பாடு தவறு, ஆளுநர் பதவியை நீக்க வேண்டும் என்று இவர் கமெண்ட் செய்துள்ளார்.

தேசிய அளவில் கவனம்

தேசிய அளவில் கவனம்

சர்வதேச அளவில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி பதிவிடும் அசோக் ஸ்வைனும் ஆளுநரின் செயலை பகிர்ந்து உள்ளார். ஆளுநர் ஆர். என் ரவிக்கு எதிராக திமுகவினர் மூலம் உருவாக்கப்பட்ட டேக் ஒன்றும் டிரெண்டாகி வருகிறது. நாடாளுமன்றம் பாராளுமன்றத்தில் மெஜாரிட்டி இல்லை என்றால் அவர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்கள் என்று விமர்சனம் வைக்கப்பட்டு உள்ளது. GetOutRavi என்ற டேக் தேசிய அளவில் தற்போது டிரெண்டாகி வருகிறது.

சர்ச்சை

சர்ச்சை

தேசிய அளவில் தற்போது டிரெண்டாகும் ஹேஷ்டேக்குகளில் இந்த டேக்குகள்தான் முதல் இரண்டு இடங்களில் உள்ளது. முதல் டேக்கில் TNGovt என்று உள்ளது. இரண்டாவது டேக் GetOutRavi ஆகும். திமுக ஐடி விங்தான் இதை தொடங்கி வைத்தது. கெளம்பு கெளம்பு அறுந்து போச்சு கெளம்பு கெளம்பு என்ற காலா பட பாடலை பதிவிட்டு திமுகவினர் விமர்சனம் வைத்து வருகின்றனர். சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் திராவிட மாடல், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர்.. இந்த வார்த்தைகளை படிக்க மறுக்கும் ஆளுநர் எங்களுக்கு தேவையில்லை, என்று திமுக விமர்சனம் வைத்துள்ளது.

காங்கிரஸ்

காங்கிரஸ்

காங்கிரஸ் எம்பி மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷும் ஆளுநர் ஆர். என். ரவியை விமர்சனம் செய்துள்ளார். தமிழ்நாடு ஆளுநராக இருக்கும் முன்னாள் உளவுத்துறை அதிகாரியின் செயல்பாடு தவறு. அவர் அரசியலமைப்பு சட்டத்தின் அனைத்து விதிகளையும் மீறிவிட்டார். அவர் முழுக்க முழுக்க தன்னை நியமித்தவர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டு இருக்கிறார். அவர் தான் இருக்கும் பதவிக்கே மிகப்பெரிய அவமானத்தை தேடி கொடுத்துள்ளார், என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+