"அறியாமையின் உச்சம்" மார்க்ஸ் பற்றி பேசுவதை ஆளுநர் ரவி நிறுத்திக் கொள்ள வேண்டும்.. முத்தரசன் கண்டனம்

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கார்ல் மார்க்ஸ் பற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருக்கும் கருத்து அறியாமையின் உச்சம் என்றும், மார்க்ஸ் பற்றி பேசுவதை ஆளுநர் பேசுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இரு நாட்களுக்கு முன் ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, கார்ல் மார்க்ஸ் பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், இந்தியா சாதி, இனம் என பிளவுப்பட்டுள்ளது. கடந்த 7 தலைமுறைகளை கடந்து வறுமை, பசி, ஆரோக்கியமின்மை, கல்வியின்மை நிலை ஆகியவற்றை ஒழிக்க முடியாமல் உள்ளோம்.

இதற்கெல்லாம் மேற்கத்திய கலாச்சாரம் மற்றும் மேற்கத்திய மனநிலையை பின்பற்றுவதே காரணம். 75 ஆண்டுகளுக்கு பிறகும் பலர் இந்தியாவில் ஏழைகளாக உள்ளதற்கும் அதுவே காரணம். கார்ல் மார்க்ஸ் இந்தியாவின் சமூக கோட்பாடுகளை சிதைக்க வேண்டும் என கட்டுரை எழுதியுள்ளார். கார்ல் மார்க்ஸின் சிந்தனை இந்தியாவை சிதைத்தது. இன்று மார்க்ஸின் தத்துவம் புறந்தள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

முத்தரசன் கண்டனம்

முத்தரசன் கண்டனம்

இதற்கு கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கார்ல் மார்க்ஸ் பற்றி பேசுவதை ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆயிரமாண்டுகளில் தோன்றிய அறிஞர்களில் தலைசிறந்த பேரறிவாளர் காரல் மார்க்ஸ் என அறிவுலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதனை அறியாத தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, காரல் மார்க்சின் சிந்தனை இந்தியாவை சிதைத்தது" என பேசியிருப்பது அவரது அறியாமையின் உச்சத்தை காட்டுகிறது.

வரலாற்றுத் துயரம்

வரலாற்றுத் துயரம்

தமிழ்மொழி மற்றும் சமூகம் குறித்தும், இந்திய ஒன்றியத்தில் இணைந்துள்ள மாநிலங்களில் நிலவி வரும் தனித்துவம் வாய்ந்த சமூக உறவுகள் குறித்தும் அடிப்படை புரிதல் இல்லாதவர் தமிழ்நாட்டின் ஆளுநராக வந்திருப்பது வரலாற்றுத் துயரமாகும். சமூகப் பொருளாதார வாழ்வில் முற்றி வரும் நெருக்கடியில் இருந்து வெளியேற வழி தேடி, உலகம் முழுவதும் காரல் மார்க்ஸ் மறுவாசிப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறார் என்பதை ஆளுநர் கருத்தில் கொள்ள வேண்டும்.

அவதூறுகள் புதிதல்ல

அவதூறுகள் புதிதல்ல

சாதி அடுக்குமுறை சமூக அமைப்பில், மனிதர்களைப் பிளவுபடுத்துவதற்காகவே, மதவெறியை மூட்டிவிடும் மூடத்தனத்தின் "முகவர்கள்", சமூக பொருளாதார விடுதலைக்கு வழிகாட்டிய அறிவு ஆசான் காரல் மார்க்ஸ் மீது அவதூறு பொழிவது புதிதல்ல. அவர் "உலகத் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள், இழப்பதற்கு ஏதுமில்லை, அடிமை விலங்குகளைத் தவிர" என்ற உண்மையை உலகுக்கு அறிவித்த அடி நாள் தொட்டு, அதன் மீது பொழியப்பட்ட அவதூறுகளையும், அடிப்படையில்லாத குற்றச்சாட்டுக்களையும், அடக்குமுறைகளையும் முறியடித்து முன்னேறி வருவதை வரலாறு உறுதி செய்துள்ளது.

எச்சரிக்கை

எச்சரிக்கை

வர்க்க பேதமில்லாத, சாதி, மத வேற்றுமைகள் இல்லாத, நிகரற்ற மனிதநேய சமூகம் அமைக்க முடியும் என்ற அறிவியல் உண்மையை உலகத்திற்கு அறிவித்த மேதை காரல் மார்க்ஸ் குறித்து விஷமத்தனமாக பேசுவதை ஆளுநர் ரவி இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு எச்சரிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+