கெட் அவுட்டா? ரெடியான ’கனமான’ ஃபைல்! டெல்லிக்கு வண்டியை விடும் ஆளுநர் ரவி? அமித் ஷாவுடன் மீட்டிங்!
சென்னை : தமிழ்நாடு சட்டசபையில் இன்று நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து உள்துறை அமைச்சகத்துக்கு தமிழ்நாடு ஆளுநரான ஆர்.என்.ரவி அறிக்கை அளித்துள்ளதாகவும் இது தொடர்பாக நேரில் விளக்கம் அளிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவர் நேரில் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
எதிர்பார்த்தது போலவே தமிழ்நாடு சட்டசபையில் இன்று அரங்கேறிய நிகழ்வுகள் ஆளுநர் ஆர்.என் ரவிக்கு கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்யும் வகையில் இருந்தது. ஆரம்பத்தில் இருந்தே ஆளுநருக்கு தமிழ்நாடு அரசுக்கும் எல்லா விவகாரங்களிலும் மோதல் போக்கு தொடர்ந்து வந்தது.
குறிப்பாக அவர் பதவியேற்றதிலிருந்தே திமுகவுக்கு எதிரான மனப்பான்மையில் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தமிழகம் தமிழர் நலன் சார்ந்த விஷயங்களை ஆளுநர் புறம் தள்ளிவிட்டு பாஜக தலைவர் போல செயல்படுவதாக கடுமையான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

சட்டசபை கூட்டத் தொடர்
அதுமட்டுமல்லாமல் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா, கூட்டுறவு சங்கங்கள் மசோதா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்துள்ளதாகவும் இதனால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாக தமிழக அரசு குற்றம் சாட்டி வந்தது. அது மட்டுமல்லாமல் துணைவேந்தர் விவகாரம், பல்கலைக்கழக விழாக்களில் சனாதானம், திருவள்ளுவர், தமிழ் மொழி குறித்து ஆளுநரின் மாறுபட்ட கருத்துக்கள் பிரிவினை வாதத்தை தூண்டுவது போலவும் பாஜக அரசின் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி கலவரத்தை உண்டாக்கும் சூழல் இருப்பதாக திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன.

ஆளுநர் ரவி
எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகையில் காசி தமிழ்ச் சங்கம் விழா தொடர்பான நிகழ்ச்சியில் பேசி ஆளுநர் தமிழ்நாட்டை தமிழகம் என்பது அழைப்பது சரியாக இருக்கும் என கூறியதாக குற்றம் சாட்டி திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கடுமையான கண்டனங்களை முன்வைத்தன. ஏற்கனவே ஆளுநரை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் இந்த விவகாரம் தமிழக முழுவதும் பலத்த கண்டனங்களை பெற்றது.

பரபரப்புகள்
இதற்கிடையே 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கியது. ஏற்கனவே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்று பரபரப்புகளுக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே ஆளுநரின் உரையை திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தன. இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. தொடர்ந்து முதல்வர் பேசிக் கொண்டிருக்கும்போதே ஆளுநர் வெளியேறியது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

புகார்
ஆளுநருக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என பாஜக அதிமுக உள்ளிட்ட கட்சிகளும், சபை மாண்பை ஆளுநர் புறக்கணித்ததாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகளும் குற்றம் சாட்சி வருகின்றன. இந்த விவகாரம் தமிழக மட்டுமல்லாது தேசிய அளவில் கவனம் பெற்ற நிலையில் இது தொடர்பாக மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் சட்டசபையில் இன்று நடந்த நிகழ்வுகளை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் அறிக்கையாக அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றனர்.

அமித் ஷா
இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் டெல்லியில் நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க இருப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் உலாவுகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் ரவி டெல்லி பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் உலாவி வருகின்றன இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

கனமான கோப்புகள்
இந்த நிலையில், கூடுதல் தகவலாக 'கெட் அவுட் ரவி' என்று ஆளுநருக்கு எதிராக சென்னை முழுக்க ஒட்டப்பட்ட போஸ்டர்களை மத்திய உளவுத்துறையினர், ஃபோட்டோ மற்றும் வீடியோ எடுத்து ராஜ்பவனுக்கு அனுப்பி வைத்துள்ளது. மேலும், சோசியல் மீடியாக்களில் ஆளுநருக்கு எதிராக திமுக ஐ.டி.விங்க் பதிவிட்ட அனைத்து பதிவுகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. இவைகள் அனைத்தையும் தனது ரிப்போர்ட்டுடன் இணைத்து டெல்லிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்துள்ளதாகவும், பொங்கலுக்குப் பிறகு ஆளுநர் டெல்லிக்கு செல்லும் நிலையில், இந்த முறை அவருடன் கனமான பல கோப்புகளும் டெல்லிக்கு பறக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த பயணம் பொங்கல் பண்டிகைக்கு பிறகு இருக்கும் என தகவல்.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்












Click it and Unblock the Notifications