Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தமிழ்நாடு பெயர், இலச்சினை நீக்கம்".. பொங்கல் அழைப்பிதழில் தமிழகம் என குறிப்பிட்ட ஆளுநர்! பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி அனுப்பி இருக்கும் பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என்ற வார்த்தைக்கு பதிலாக தமிழக ஆளுநர் என்ற வார்த்தை இடம்பெற்று இருப்பது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என்று மாநில ஆளுநர் ஆர்.என். ரவி பேசியதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆளுநரின் பேச்சுக்கு எதிராக தமிழ்நாட்டில் திமுக, திமுக கூட்டணி கட்சிகள் கடுமையாக கொந்தளித்து உள்ளன.

அதிமுகவில் ஜெயக்குமார் சார்பாக ஆளுநரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவன் வளாகத்தில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் இருந்து சென்று திரும்ப ஏற்பாடுகளை செய்த அமைப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை கெளரவிக்கும் நிகழ்ச்சி இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.

ஆளுநர் ரவி

ஆளுநர் ரவி

இந்த நிகழ்வில் பேசிய ஆளுநர் ஆர். என் ரவி, துரதிருஷ்டவசமாக இங்கு தமிழகத்தில் "நாங்கள் திராவிடர்கள்" என்ற பிற்போக்கு அரசியல் இருந்து வருகிறது. அதனுடன் நமக்கு எந்தத் தொடர்பும் இல்லை. தமிழ்நாடு நமது பாரதத்தின் ஒரு பகுதி என்ற உண்மையை நீங்கள் அறிவீர்கள். அதில் தமிழ்நாடு ஒரு இடம் என்பது தெரிந்ததே. தமிழகம் என்று நாம் அழைப்பது மிகவும் பொருத்தமானது. காரணம், இந்த நிலம் பாரதத்தின் ஆன்மாவை, பாரதத்தின் அடையாளத்தை பராமரிக்கிறது, என்று ஆளுநர் ஆர். என் ரவி தனது உரையில் குறிப்பிட்டு இருந்தார்.

ஆளுநர் ஆர். என் ரவி

ஆளுநர் ஆர். என் ரவி

இந்த நிலையில்தான் ஆளுநர் ஆர். என் ரவி நேற்று தமிழ்நாடு சட்டசபையில் ஆற்றிய உரை பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல், ஆளுநர் ஆர். என் ரவி அதில் சில பத்திகளை நீக்கியும், சில வரிகளை தாமாக சேர்த்தும் பேசி இருக்கிறார். ஆனால் ஆளுநர் ஆர். என் ரவி இந்த விதியை மீறி உள்ளார். ஆளுநர் ரவி தனது உரையில் 65வது பத்தியை அப்படியே தவிர்த்து இருக்கிறார். அந்த பத்தியில், சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இவ்வரசின் அடித்தளமாக அமைந்துள்ளன. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி, பார்போற்றும் திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு வழங்கி வருகின்றது, என்ற பகுதியை மொத்தமாக தவிர்த்து உள்ளார்.

தமிழ்நாடு

தமிழ்நாடு

அதோடு தமிழ்நாடு அரசின் கீழ் சட்ட ஒழுங்கு சரியாக இருக்கிறது. தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்கிறது என்ற வாசகத்தையும் ஆளுநர் ஆர். என் ரவி பயன்படுத்தாமல் தவிர்த்தார். இதெல்லாம் போக தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிகிறது. தமிழ்நாடு முதலீடுகளில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கிறது என்று முதலீடுகள் தொடர்பான வார்த்தைகளையும் ஏனோ ஆளுநர் ஆர். என் ரவி அப்படியே தவிர்த்து இருக்கிறார். ஆளுநரின் இந்த செயல் கடுமையான விமர்சனங்களை சந்தித்து உள்ளது. இதற்கு சட்டசபையில் ஆளுநர் ரவி உடனே பதிலடி கொடுத்தார். அதேபோல் தமிழ்நாடு அரசு என்று தொடக்கத்தில் கூறிய ஆளுநர் ஆர். என் ரவி அதற்கு பின்பாக இடங்களில் தமிழ்நாடு அரசு என்று சொல்லாமல்.. இந்த அரசு என்று கூறினார்.

சர்ச்சை

சர்ச்சை

தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி அனுப்பி இருக்கும் பொங்கல் விழா அழைப்பதில் தமிழ்நாடு ஆளுநர் என்ற வார்த்தைக்கு பதிலாக தமிழக ஆளுநர் என்ற வார்த்தை இடம்பெற்று இருப்பது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. 12ம் தேதி மாலை இந்த பொங்கல் விழா நடக்கிறது. இந்த பொங்கல் விழாவிற்கு ஆளுநர் சார்பாக ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, சட்டசபையில் உள்ள கட்சிகள், முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு சென்றுள்ளது. இந்த அழைப்பிதழில் தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழக ஆளுநர் என்ற வார்த்தை இடம்பெற்று உள்ளது. தமிழ்நாடு- தமிழக வார்த்தை பிரயோகம் சர்ச்சை ஆன நிலையில், ஆளுநர் தற்போது அனுப்பி இருக்கும் இந்த கடிதமும் கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

எம்பி நீக்கம்

எம்பி நீக்கம்

இது தொடர்பாக சிபிஎம் எம்பி சு வெங்கடேசன் செய்துள்ள பதிவில், ஆளுநர் அழைப்பிதழில், கடந்த முறை வந்த அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலட்சினை இருந்தது. இந்த முறை வந்துள்ள அழைப்பிதழில் மூன்று இடங்களிலும் இந்திய அரசின் இலட்சினை மட்டுமே இருக்கிறது. நமது இலட்சினையில் தமிழ்நாடு என்று எழுதப்பட்டுள்ளதால் அதனைப் பயன்படுத்த மறுத்துள்ளார். இதேபோல தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்தும் வாடகை வீட்டிலிருந்தும் ரோசப்பட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கலாமா?, என்றும் சு வெங்கடேசன் போஸ்ட் செய்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+