கன்னியாகுமரிக்கு இன்று ஆளுநர் பயணம்.. கூட்டாலுமேடு கோயில் திருவிழா சமய மாநாட்டை தொடங்கி வைக்கிறார்
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) கன்னியாகுமரிக்குச் செல்லவுள்ளார். நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளி கட்டட திறப்பு விழா மற்றும், கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா சமய மாநாட்டை தொடங்கி வைக்கவுள்ளார். ஆளுநர் வருகையையொட்டி, கவர்னர் அரசு விருந்தினர் மாளிகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கன்னியாகுமரி மாவட்டத்துக்குச் செல்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை காலை 11.25 மணிக்கு புறப்பட்டு 12.45 மணிக்கு திருவனந்தபுரம் வந்தடைகிறார். பின்னர், அங்கிருந்து கார் மூலமாக மதியம் 2.15 மணிக்கு நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகை செல்லவுள்ளார்.

ஆளுநர் வருகையையொட்டி நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அரசு விருந்தினர் மாளிகையில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு அங்கு ஓய்வெடுக்கவுள்ளார். பின்னர், மாலை 3.40 மணிக்கு வெள்ளிமலைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி செல்லவுள்ளார்.
வெள்ளிமலையில் உள்ள தனியார் பள்ளி கட்டட திறப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்கவுள்ளார். மாலை 5 மணியளவில் அங்கு நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்லவுள்ளார்.
அதைத்தொடர்ந்து, மாலை 6.20 மணிக்கு அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோவிலுக்குச் செல்லவுள்ளார். அங்கு இரவு 7 மணிக்கு திருவிழா சமய மாநாட்டை ஆளுநர் தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்குச் சென்று தங்கவுள்ளார். பின்னர், நாளை (திங்கள்கிழமை) காலை 6.55 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடையவுள்ளார்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications