"3 நாட்களில் 2 பேர் பலி" ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்.. ஆளுநர் பிடிவாதம் காட்டக்கூடாது.. ராமதாஸ்!
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட விவகாரத்தில் ஆளுநர் பிடிவாதம் காட்டக் கூடாது என ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 43ஆக அதிகரித்துள்ளது. இதனால் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்கு எந்த நியாயமும் இல்லை என்றும், ஆளுநர் பிடிவாதம் காட்டக்கூடாது என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அண்மைக் காலமாக தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களால் தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் அதிகரித்தது. இதனால் கடந்த அதிமுக ஆட்சியில் 2020ம் ஆண்டு நவம்பரில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அந்த சட்டம் செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதன்பின்னர் மீண்டும் திமுக ஆட்சியில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இதுநாள் வரை அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கவில்லை. ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழக்கும் இளைஞர்களின் தற்கொலை அதிகரித்து வருவது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமதாஸ் இரங்கல்
இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்," சேலம் மாவட்டம் ஆத்தூரையடுத்த உடையார்பாளையத்தைச் சேர்ந்த பிரபு என்ற கூலித்தொழிலாளி ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

43வது தற்கொலை
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு நிகழ்ந்த 43 ஆவது தற்கொலை இது. ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு நிகழ்ந்திருக்கும் 14-ஆவது தற்கொலை இது. கடந்த 3 நாட்களில் நிகழ்ந்த 2-ஆவது தற்கொலை இது . இவற்றுக்கு ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும்!

நியாயமில்லை
தமிழ்நாட்டிற்கு ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ஏன் தேவை? என்பது புள்ளிவிவரங்களுடன் விளக்கப்பட்டிருக்கும் போதிலும், ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்கு எந்த நியாயமும் இல்லை. இதில் ஆளுநர் பிடிவாதம் காட்டக்கூடாது!

ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படவில்லை என்றால் இத்தகைய தற்கொலைகள் தொடர்கதையாகி விடும். அப்படி ஒரு நிலை ஏற்படுவதை அரசும், ஆளுநரும் தடுக்க வேண்டும். அதற்காக ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications