சாலையில் மயங்கி விழுந்த மூதாட்டி! பதறிதுடித்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்த ஆளுநர் தமிழிசை!
சென்னை: சென்னை சாலிகிராமத்தில் சாலையில் மயங்கி விழுந்த மூதாட்டி ஒருவருக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முதலுதவி சிகிச்சை வழங்கி மருத்துவமனை அனுப்பி வைத்தார்.
பொங்கல் நன்னாளில் மருத்துவ சேவையாற்றி மூதாட்டியின் உயிரை காப்பாற்றியதற்காக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
தமிழிசை சவுந்தரராஜன் மருத்துவராக இருந்து பிறகு அரசியலுக்குள் நுழைந்தவர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

தெலுங்கானா ஆளுநர்
தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தனது குடும்பத்தினருடன் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று பொங்கல் கொண்டாடினார். இதையடுத்து அவரை சந்தித்து வாழ்த்துப் பெறுவதற்காக ஏராளமானோர் திரண்டதால் அவர்களை சந்தித்து கொண்டிருந்த வேளையில், சாலையில் இருசக்கர வாகனத்திலிருந்து சித்ரா என்ற மூதாட்டி மயங்கி விழுந்த தகவலை அறிந்திருக்கிறார்.

மருத்துவமனை
இதையடுத்து சற்றும் தாமதிக்காமல் பதறித்துடித்து சென்று அந்த சித்ராவை பரிசோதித்து பார்த்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், உடனடியாக 108 ஆம்புலன்ஸை வரவழைத்து அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன் அந்த மூதாட்டிக்கு தண்ணீர் கொடுத்த தமிழிசை, சித்ரா அம்மா எப்படி இருக்கீங்க என வாஞ்சையுடன் அந்த மூதாட்டியிடம் நலம் விசாரித்தார்.

மனிதநேயம்
இதனிடையே வெறுமனே 108 ஆம்புலன்ஸை வரவழைத்து அதில் ஏற்றி மட்டும் விடாமல், பிரபல தனியார் மருத்துவமனையை தொடர்பு கொண்டு பேசி உரிய சிகிச்சை அளிக்கவும் கேட்டுக்கொண்டார். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் இந்த மனிதநேயமிக்க செயல் அனைவரது பாராட்டையும் பெற்றிருக்கிறது. இந்தக் காலத்தில் ஒரு வார்டு கவுன்சிலரே பகட்டாகவும், பந்தாவாகவும் சுற்றி வரும் நிலையில், ஆளுநர் தமிழிசையின் எளிமையும், மனிதநேயமும் அவருக்கு சிறப்பு சேர்த்துக் கொடுத்திருக்கிறது.

மருத்துவர்
அரசியலுக்குள் நுழைவதற்கு முன்னர் தமிழிசை சவுந்தரராஜன் மருத்துவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தஞ்சை, சென்னை என பல ஊர்களில் அவர் மருத்துவராக சேவையாற்றி இருக்கிறார். ஆளுநர் பணிக்கு மத்தியிலும் அவ்வப்போது உடல்நலம் சார்ந்த பதிவுகளையும் மக்கள் நலன் கருதி அவர் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications